வினோத செய்திகள் - சகோதரியின் கனவில் வந்த நம்பர்களால் ₹20 லட்சம் லாட்டரி பரிசை வென்ற பெண்!
ஒரு அமெரிக்கப் பெண்மணி, தனக்கு $25,000 (~ ₹ 20 லட்சம்) லாட்டரிப் பரிசைப் பெற்று தந்த அதிர்ஷ்ட நம்பர்கள் அவருடைய சகோதரியின் கனவில் இருந்து கிடைத்தது என்று சொல்லி இருக்கிறார்.
"23815" என்ற எண்ணைக் கொண்ட பஸ்ஸில் தான் பயணித்த கனவை தனது சகோதரி விவரித்ததாக அந்த 68 வயதானப் பெண் கூறினார்.
எனவே ஜூலை மாதம் நடைப்பெற்ற லாட்டரி குலுக்கலுக்காக 2-3-8-1-5 எண்கள் கொண்ட லாட்டரி டிக்கெட்டை வாங்கி இருக்கிறார்.
லாட்டரி முடிவுகளைச் பார்த்தபோது திகைத்துப் போனதாக அவர் கூறினார். அவருக்கு குலுக்கலில் இருபது லட்சம் ரூபாய் பரிசு விழுந்திருந்தது!
இந்த பரிசுத் தொகையை தன் கடன்களை அடைக்க செலவிடப் போவதாக அவர் சொல்லி இருக்கிறார்.
அதிர்ஷ்ட கனவு, அதிர்ஷ்ட சகோதரி என்று தான் சொல்ல வேண்டும்!!!
அதிசய உலகம் - மற்ற கட்டுரைகள்