Chillzee WhatsApp Specials - நீண்ட நாள்கள் கழித்து என் அம்மாவிற்கு போன் செய்தேன்
நீண்ட நாள்கள் கழித்து என் அம்மாவிற்கு போன் செய்தேன்.
“எப்படிர்ரா.. இருக்கே?”
இப்பவாவது போன் செய்தானே என்று அவரின் குரலில் ஒரு மகிழ்ச்சி தெரிந்தது போன்ற பிரமை.
“நல்லாருக்கம்மா... நீ எப்படி இருக்கே?”
“இருக்கேன்.. சொல்லுடா.. என்ன அதிசயமா போன் பண்ணியிருக்கே... உங்க வீட்டு மகாராணி எப்படியிருக்கா?” என்று குடும்ப பாலிட்டிக்ஸில் இறங்க முனைந்தவரை இடைமறித்தேன். “யம்மோவ்... ஒரு முக்கியமான விசயம் கேட்கணும்..தாயபாஸ்ல காய் தோயறதுக்கு.. தாயம்தான் போடணுமா.. அஞ்சு போட்டாகூட ஓகேன்றேன், இவ ஒத்துக்க மாட்டேன்றா”
‘இதையெல்லாம் பெத்து... வளத்து...’ என்று பிறகு யோசித்திருப்பார் போல...
Do you have a WhatsApp message to share with Chillzee Readers? Send it to +19085470867