(Reading time: 2 - 3 minutes)
Chillzee WhatsApp Specials
Chillzee WhatsApp Specials

Chillzee WhatsApp Specials - கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஸ்வீடன் இளவரசி

லக அளவில் கொரோனா தொற்றால் உலுக்கி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தினை கடந்துள்ளது. இந்த தொற்றால் 1லட்சத்து 40 ஆயிரம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். ஸ்வீடன் நாட்டில் 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 1,400 பேர் உயிரிழந்துள்ளனர்.

  

 இந்த நிலையில் அந்நாட்டு இளவரசி சோபியா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படும் மருத்துவமனையில் பணியாற்றத் தொடங்கியுள்ளார். 35 வயதான இவர் ஆண்லைனில் இதற்காக மூன்று நாட்கள் பயிற்சியினை முடித்தபின்பு அந்நாட்டுத் தலைநகரில் உள்ள சோபியா ஹெமெட் மருத்துவமனையில் தன்னார்வத் தொண்டு செய்ய தொடங்கியுள்ளார்.

 

மருத்துவமனையில் சுகாதார உதவியாளராக சேர்ந்துள்ள இளவரசி சோபியா, கொரோனா நோயாளிகளை கையாள்வதில் நேரடியாக ஈடுபட மாட்டார் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் மருத்துவர் அல்லது சுகாதார பணியாளர்களுக்கு உதவும் பணியில் ஈடுபடுத்தப்படுவார் என்றும் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

  

Do you have a WhatsApp message to share with Chillzee Readers? Send it to ‪+19085470867‬

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.