(Reading time: 3 - 5 minutes)
Chillzee WhatsApp Specials
Chillzee WhatsApp Specials

Chillzee WhatsApp Specials - வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை

காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.

 

உள்ளாடைகள் கிழியாவிட்டாலும் 6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள்.

ஒருநாள் பயன்படுத்தியபிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள்.

 

சிறுவர்கள் 1 ஸ்பூன், பெரியவர்கள் 2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும், சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும். வந்தால் கட்டுக்குள் இருக்கும்.

 

காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள். கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும்.

 

உணவை நன்றாக மென்று, பொறுமையாக உண்ணுங்கள்.

 

சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது.

அதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்;  புற்றுநோயை உருவாக்கும்.

 

மைதா பரோட்டா வேண்டவே வேண்டாம், வாழ்நாளைக் குறைக்கும்.

குளிர்பானம், பாக்கெட் தீனிகள் வேண்டாம்.

 

பிராய்லர் கோழிக்கறி வேண்டாம். மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக் கோழி மட்டும் சாப்பிடுங்கள்.

மது, புகை கூடவே கூடாது.

 

மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது.

 

உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு அடுத்த திட உணவு கூடாது.

 

பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், டார்க் சாக்லட், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம், சோற்றுக்கற்றாழை (ஏழு முறை சுத்தம் செய்து தேன் கலந்து) நாள்தோறும் சாப்பிடவும்.

 

பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால், தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிடவேண்டும்.

 

காலை அல்லது மாலை 1 மணி நேரம் உடற்பயிற்சி, இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை கட்டாயம் உறங்க வேண்டும்.

4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள்.

கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.

 

காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம் மலம் கழிக்க வேண்டும்.

கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

 

"வாழ்க நலமுடன்"...

     

Do you have a WhatsApp message to share with Chillzee Readers? Send it to ‪+19085470867‬

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.