(Reading time: 2 - 4 minutes)
Chillzee WhatsApp Specials
Chillzee WhatsApp Specials

Chillzee WhatsApp Specials - நம்பிக்கையில்லை...

ல்லாம் ஒழுங்காக நடக்க, நீங்கள் நம்பிக்கையோடு இருந்தால் அதன் பெயர் நம்பிக்கையில்லை.

 

எதுவுமே ஒழுங்காக நடக்காதிருக்கும் போதும், நீங்கள் தைரியமாக வாழ்ந்தால் அதன் பெயரே நம்பிக்கை ! ! !

 

நீங்கள் நினைப்பதெல்லாம் உங்களுக்கு நடக்க நீங்கள் பலமாக உணர்ந்தால் அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .

 

நீங்கள் நினைக்காத பயங்கரங்கள் உங்களுக்கு நடந்தாலும் நீங்கள் அசராமலிருந்தால் அதன் பெயரே நம்பிக்கை ! ! !

 

உற்றாரும் பிறரும் உங்களுக்கு உதவி செய்ய,

நீங்கள் நிதானமாக இருந்தால்

அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .

 

உங்களுக்கு உதவ யாருமே

தயாராக இல்லாத சமயத்திலும்

நீங்க பக்குவத்தோடிருந்தால் அதன் பெயரே நம்பிக்கை ! ! !

 

எல்லோரும் உங்களைக்கொண்டாட, நீங்கள் சந்தோஷமாக

இருந்தால் அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .

 

எல்லோரும் உங்களை அவமதித்து ஒதுக்கித் தள்ள

அவர்கள் முன் ஜெயிக்கப் போராடினால்

அதன் பெயரே நம்பிக்கை ! ! !

 

உங்கள்l முயற்சிகளெல்லாம் வெற்றியடைய நீங்கள் அழகாகதிட்டமிட்டால் அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .

 

உங்களுடைய எல்லா முயற்சிகளும்

தோல்வியடைய, அதிலிருந்து பாடம் கற்று நீங்கள் முயன்று கொண்டேயிருந்தால்

அதன் பெயரே நம்பிக்கை ! ! !

 

எல்லோரும் உங்களுக்கு நம்பகமாக நடக்க, நீங்கள் தெளிவாய் முடிவெடுத்தால்

அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .

 

உங்களுக்கு வேண்டியவரெல்லாம்

உங்கள் முதுகில் குத்திக் கொண்டேயிருக்க

நீங்கள் தெளிவான வழியில் சென்றால்

அதன் பெயரே நம்பிக்கை ! ! !

 

உங்களிடத்தில் எல்லாம் இருக்க,

நீங்கள் எதிர்காலத்தைப் பற்றிக்கவலையில்லாமல் இருந்தால்

அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .

 

உங்களிடத்தில் எதுவுமே இல்லாத பச்சத்தில், நீங்கள் எதிர்காலத்தை நினைத்துப் பயப்படாமல் இருந்தால் அதன் பெயரே நம்பிக்கை ! ! !

 

அன்பான_இனிய வணக்கம்

Do you have a WhatsApp message to share with Chillzee Readers? Send it to ‪+19085470867‬

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.