(Reading time: 3 - 5 minutes)
Chillzee WhatsApp Specials
Chillzee WhatsApp Specials

Chillzee WhatsApp Specials - ✅ இது தான் வாழ்க்கை ✅

✅ இது தான் வாழ்க்கை ✅

 

👉🏾 தனது குடும்பம் என்ற ஒரு பத்து பேர்,

👉🏾 தனது நண்பனும் பகைவனும் என்ற பத்து பேர்,

👉🏾 தனது தொழிலில் ஒரு பத்து பேர்,

👉🏾 தனது வீதியில் ஒரு பத்து பேர்,

👉🏾 தனது ஜாதியில் ஒரு அறுபது பேர்..!!

 

👉🏾இந்த நூறு பேரின் நடுவில் 😇 தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்வதும்,. 👩‍❤‍💋‍👩 பாசமாக, 🐕 நட்பாக, 💘அன்பாக, 😠 வீரனாக, 😎 நல்லவனாக காட்டிக் கொள்வதுமே மனித வாழ்வின் குறிக்கோள் என்று இந்த கேடுகெட்ட சமுதாயம் மனிதர்களுக்கு போதிக்கிறது.

 

எல்லாவற்றையும் அவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து 👉🏾 அதை விட ஒரு படியேனும் அதிகமாக இருக்க வேண்டும் அப்போது தான் மதிப்பு என்று போலியான வாழ்க்கை வாழ கட்டாயப்படுத்துகிறது.

 

👉🏾 அவன் அப்படி, 👉🏾 இவன் இப்படி என்று பிறரை விமர்சனம் செய்யச் சொல்கிறது. 🎟🎫பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைந்ததும்

🤓 பிறரை ஏளனமாக, கேவலமாக நினைக்கச் சொல்கிறது.

1⃣0⃣0⃣

இந்த நூறு பேரின் நடுவில் ஏற்படும் அவமானமும், கோபமும், கௌரவமும் மட்டுமே ஒருவனைப் பாதிக்கின்றன. 👉🏾 இதற்காக தன்னுடைய அத்தனை ஆசாபாசங்களையும் அடக்கி வைத்து,

மனித ஜடமாக வாழும் பலருக்கு இந்த பூமிப் பந்து எழுநூறு கோடி மக்களால் ஆனது என்பது தெரிவதில்லை.

 

👉🏾 என்னுடைய தாத்தாவின் தாத்தா எப்படி இருந்தார் என்பது எனக்குத் தெரியாது!

 

👉🏾 எப்படி வாழ்ந்தார் என்பது எனக்குத் தெரியாது!!

 

👉🏾 அவர் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது!!

 

👉🏾 அவர் பெயர் கூட எங்கள் தெருவில் பலருக்குத் தெரியாது,

👉🏾 எங்கள் ஊரில் யாருக்கும் தெரியாது!!

 

👉🏾 இதே நிலை எனக்கும் ஒரு நாள் வரும்!

 

👉🏾 நான் இந்த பூமியில் வாழ்ந்ததற்கான அடையாளம் அத்தனையும் கால ஓட்டத்தில் மறையும்!!

 

ஆக எதற்காக இந்த நூறு பேரின் அங்கீகாரக்தை நான் கண்டு கொள்ள வேண்டும் ????

 

👉🏾 யார் இவர்கள் ????

 

என்னுடைய வாழ்க்கையில் யாரெல்லாம் வர வேண்டும், வரக்கூடாது என்பதை தீர்மானிக்க இவர்கள் யார் ????

 

✍ நான் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு வாழப் போவதில்லை!

 

✅அதிகபட்சம் இன்னும் சில ஆண்டுகள்!

 

👉🏾 அதுவும் வெகு தொலைவில் இல்லை!

 

❌சர்வமும் ஒருநாள் அழியும்❌

 

👉🏾 👌🏽✅😇🙏🏽💘மனித வாழ்க்கை அற்புதமானது. அழகானது!

 

 🙏🏽🙏🏽🙏🏽

தத்தமது வாழ்க்கையை யாரும் போலியாக வீணடித்து விடாதீர்கள்🙏🏽

 

✅ வாழ்க்கை ஒரே ஒரு முறைதான்!    

 

தோற்றால் பரவாயில்லை, ஆனால் பங்கெடுக்காமலேயே அழிந்து விடாதீர்கள்.

 

நம் தாத்தாவின் தாத்தாவை நாம் பார்த்ததில்லை. அதே போல் நம் பேரனின் பேரனை நாம் பார்க்க இருக்கப் போவதில்லை. இது தான் வாழ்க்கை.

 

👉🏾 பிறரை வஞ்சிக்காமல் தொந்தரவு செய்யாமல் எவ்வளவு இயலுமோ அவ்வளவு மகிழ்ச்சியாய் வாழ்ந்து விட்டுச் செல்லுங்கள்

🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

Do you have a WhatsApp message to share with Chillzee Readers? Send it to ‪+19085470867‬

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.