(Reading time: 2 - 4 minutes)

சினிமா சுவாரசியங்கள் - அவசரக் கல்யாணம்

மெரில் ஸ்ட்ரீப் தெரியாத சினிமா பிரியர்கள் மிகவும் குறைவு. மூன்று ஆஸ்கர் விருதுகள், 21 ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைகள் என்று தன் நடிப்பினால் பிரபலமானவர்.

 

மெரில் ஸ்ட்ரீப் 29 வயதானவராக இருந்தப் போது அவருடைய பாய் பிரென்ட் நுரையீரல் புற்றுநோயால் இறந்துப் போனார்.

 

சோகத்தில் இருந்த மெரில் ஸ்ட்ரீபுக்கு ஆறுதலாக இருக்க அவருடைய சகோதரர் வந்திருந்தார். அவரின் கூடவே அவரின் நண்பர் டான் கம்மரும் வந்திருந்தார்.

 

டான் கம்மர் மெரில் ஸ்ட்ரீப்புக்கு அனைத்து விதத்திலும் துணையாக இருந்தார்.

 

இப்படி சந்தித்த மெரில் ஸ்ட்ரீப்பும் டான் கம்மரும் ஆறு மாதங்களுக்குப் பிறகு கல்யாணம் செய்துக் கொண்டார்கள்.

 

இந்த அவசர கல்யாணத்தை விமர்சிக்காதவர்களே இல்லை. மெரில் ஸ்ட்ரீப்பின் அம்மாவும் கூட இப்படி அவசரமாக கல்யாணம் வேண்டுமா என்றுக் கேட்டார்.

  

இப்படி சந்தேகங்கள் புடை சூழ நடந்த அந்த திருமணம் இன்று 42 ஆண்டுகள் போனப் பிறகும் மனம் ஒத்த ஒன்றாக தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.

 

சினிமா துறையில் இல்லாத டான் கம்மர் மெரில் ஸ்ட்ரீப்பிற்கு எல்லா விதத்திலும் துணையாக இருக்கிறார்.

அதேப்போல மெரில் ஸ்ட்ரீப்பும் சிற்பியான டான் கம்மருக்கு உறுத்துணையாக இருக்கிறார்.

 

அவசர அவசரமாக நடந்தாலும் உண்மையான அன்பு இருப்பதால் எல்லா தடைகள், சந்தேகங்களையும் தாண்டி இன்றும் ஜோடிப்புறாக்களாக இருக்கிறார்கள் மெரில் ஸ்ட்ரீப்பும், டான் கம்மரும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.