(Reading time: 2 - 3 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - இன்ஸ்டன்ட் சாதம்

குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் வீட்டிலேயே இருக்கும் இந்த நாட்களில், தினம் தினம் அனைவருக்கும் பிடித்ததுப் போல உணவு தயார் செய்வது நம் முன்னே இருக்கும் பெரிய சவால்.

இந்த சவாலை எதிர்க்கொள்ள சில வித்தியாசமான சமையல் குறிப்புகளை இன்று தொடங்கி அடுத்து வரும் நாட்களில் பதிவு செய்கிறோம். நீங்களும் உங்களுக்கு பிடித்த உணவை தயார் செய்து அசத்துங்கள்!

   

தேவையான பொருட்கள்

வெங்காயம் – 1

மிளகாய் – 1

பூண்டு – 6 – 7 பல்

குடை மிளகாய் – 1

தக்காளி – 2

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

பட்டை

சீரக தூள் – 2 ஸ்பூன்

ஆர்கனோ (oregano) – 1 ஸ்பூன்

சாதம் - 2 கப்

உப்பு

கொத்தமல்லி இலை – 2 ஸ்பூன்

தண்ணீர் அல்லது காய்கறி வேக வைத்த தண்ணீர் – 2 கப்

 

செய்முறை

வெங்காயம், மிளகாய், பூண்டு, கேப்சிகம், தக்காளி அனைத்தையும் நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

 

ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி பட்டை சேர்க்கவும்.

  

பிறகு, காய்கறி விழுதை சேர்த்து லேசாக வதக்கவும்.

   

சீரகப் பொடி,  ஆர்கனோ,  சாதம் சேர்த்து நன்கு கலக்கவும்.

 

தேவைக்கு ஏற்ப உப்பு மற்றும் கொத்தமல்லி சேர்க்கவும்.

சாதம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கலக்கவும்.

  

மூடிப் போட்டு சிம்மில் 10 நிமிடங்கள் வைக்கவும்.

 

மெக்சிகன் ரைஸ் ரெடி!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.