(Reading time: 3 - 5 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - மசாலா இறால்

குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் வீட்டிலேயே இருக்கும் இந்த நாட்களில், தினம் தினம் அனைவருக்கும் பிடித்ததுப் போல உணவு தயார் செய்வது நம் முன்னே இருக்கும் பெரிய சவால்.

இந்த சவாலை எதிர்க்கொள்ள சில வித்தியாசமான சமையல் குறிப்புகளை இன்று தொடங்கி அடுத்து வரும் நாட்களில் பதிவு செய்கிறோம். நீங்களும் உங்களுக்கு பிடித்த உணவை தயார் செய்து அசத்துங்கள்!

  

தேவையான பொருட்கள்

1 டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு

1 டேபிள் ஸ்பூன் தனியா

1 டீஸ்பூன் சீரகம்

¼ டீஸ்பூன் மிளகு

1 சிவப்பு மிளகாய்

2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி இலை

1 டீஸ்பூன் புளி பேஸ்ட் அல்லது 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு

 தேவைக்கு ஏற்ப உப்பு

½ கிலோ சுத்தம் செய்யப் பட்ட இறால்

1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

1 டீஸ்பூன் கடுகு

1/4 கப் நறுக்கிய சின்ன வெங்காயம்

½ கப் தண்ணீர்

  

செய்முறை

ஒரு பெரிய வாணலியை மீடியம் தீயில் வைக்கவும். அதில் கடலைப் பருப்பு, தனியா, சீரகம், மிளகு மற்றும் மிளகாய் ஆகியவற்றை வறுக்கவும்.

  

பருப்பு சிவந்து, மசாலா பொருட்களில் இருந்து நல்ல வாசனை வரும் வரை வறுக்கவும். [2 – 3 நிமிடங்கள்]

 

வறுத்த பொருட்களை ஒரு தட்டில் ஆற விட்டு, மிக்ஸியில் பவுடராக அரைத்துக் கொள்ளவும்.

 

ஒரு பாத்திரத்தில் கொத்தமல்லி இலை, புளி பேஸ்ட் (அல்லது எலுமிச்சை சாறு), உப்பு மற்றும் மசாலா பவுடரை சேர்த்து நன்றாக கலக்கவும்.

  

அந்த கலவையில் இறாலை சேர்த்து, மசாலா இறாலின் எல்லா பக்கமும் படுமாறு நன்கு கலக்கவும்.

  

பாத்திரத்தை மூடி ப்ரிட்ஜில் 30 நிமிடங்கள் வைத்து மேரினேட் செய்யவும்.

  

கடாயில் எண்ணெய் சூடாக்கி, கடுகு சேர்க்கவும்.

 

கடுகு வெடித்த உடன், வெங்காயம் மற்றும் இறாலைச் சேர்க்கவும்.
இறால் நன்றாக வேக இறால்களை மேலே மேலே அடுக்கி வைக்காமல் நேராக  கடாயில் படுமாறு வைத்து வேக விடவும்.

 

இறாலின் அடிப்பகுதி இளஞ்சிவப்பு நிறமாக மாறும் வரை வேக விடவும். [மீடியம் வெப்பத்தில் 1 - 2 நிமிடங்கள்]

  

இறாலைத் திருப்பி, மறுபுறம் இளஞ்சிவப்பு நிறமாகும் வரை வேக விடவும். [மீடியம் வெப்பத்தில் 1 - 2 நிமிடங்கள்]

  

இப்போது தண்ணீர் சேர்த்து, 1 நிமிடம் கொதிக்க விடவும்.

  

சூடான மசாலா இறால் தயார்! உடனடியாக சூடான சாதத்துடன் பரிமாறவும்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.