(Reading time: 2 - 3 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - ஈஸி பிஸ்கெட் சாக்லேட்

தேவையான பொருட்கள்

பாதி பேக்கட் மேரி பிஸ்கெட்

1/4 கப் மில்க் மெய்ட் (அ) வேறு ஸ்வீட்டன்ட் கன்டென்ஸ்ட் மில்க்

1/4 கப் வெண்ணெய்

ஒரு டேபிள்ஸ்பூன் கோக்கோ பவுடர்

1/2 கப் முந்திரி

1/2 கப் வால்நட்

1/2 கப் பாதாம்

1/2 கப் காய்ந்த திராட்சை

2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை

 

செய்முறை

பிஸ்கெட்டை மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.

முந்திரி, பாதாம், வால்நட் ஆகியவற்றையும் அதே மிக்ஸியில் கொற கொற என அரைத்துக் கொள்ளவும்.

காய்ந்த திராட்சையை சிறிதாக நறுக்கி வைக்கவும்.

பிஸ்கெட் பவுடருடன், அரைத்த முந்திரி, பாதாம், வால்நட், காய்ந்த திராட்சை, கோக்கோ பவுடர், சர்க்கரை மற்றும் மில்க் மெய்ட் சேர்த்து நன்கு கலக்கவும்.

வெண்ணெயை உருக்கிக் கொள்ளவும்.

வெண்ணெய் சூடாக இருக்கும் போதே பிஸ்கெட் கலவையில் சேர்த்து நன்றாகப் பிசையவும்.

அதை உங்களுக்கு பிடித்த வடிவங்களில் உருட்டி குளிர் சாதனப் பெட்டியில் ஒரு மணி நேரம் வைத்து பரிமாறவும்.

3 comments

  • ஹாய் மதுமதி, ஃபிரிட்ஜில் இருந்து வெளியே எடுத்த உடனே காலியாகவில்லை என்றால் திரும்ப ஃபிரிட்ஜில் வைத்து வேண்டிய போது எடுத்து சாப்பிடலாம்.<br />திரும்பவும் ஃபிரீசரில் வைக்க வேண்டிய து இல்லை.
  • Fridge la irunthu velila eduthu vaikkumpodhu melt aagividaatha? :Q: answer panna mudiyuma (y) :clap: i want to try it.veg vera.so please answer :-)

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.