(Reading time: 2 - 3 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - புடலங்காய் பருப்பு கூட்டு

தேவையான பொருட்கள்

சிறிதாக நறுக்கிய புடலங்காய் - 2 கப்

கடலை பருப்பு - 1/4 கப்

பாசி பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்

மஞ்சள் – சிறிதளவு

தேங்காய் - 1/4 கப்

அரிசி மாவு - 1/4 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 3

சீரகம் - 1 டீஸ்பூன்

சின்ன வெங்காயம் - 2

எண்ணெய் - 1 டீஸ்பூன்

கடுகு – 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

உப்பு - தேவைக்கேற்ப

 

செய்முறை

புடலங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

கடலை பருப்பு, பாசி பருப்பு இரண்டையும் பிரஷர் குக்கரில் எடுத்து, தேவைக்கு தண்ணீர் சேர்க்கவும். அதனுடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்கு கிளறவும். பின் புடலங்காயை சேர்க்கவும்.

2-3 விசில் வரை வரை வைத்து எடுக்கவும்.

தேங்காய், அரிசி மாவு, பச்சை மிளகாய் ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். பிறகு சீரகம் மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து அரைக்கவும்.

வேகவைத்த புடலங்காய் பருப்புடன் அரைத்த விழுதை சேர்த்து , உப்பு கலந்து கொதிக்க விடவும்.

இன்னொரு சின்ன கடாயில் எண்ணெய் சேர்த்து, சூடானதும், கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்த உடன் உளுந்து கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

கூட்டு நன்றாக கொதித்த உடன் ஸ்டவ்வை அணைத்து விடவும். மேலே தாளித்ததை கூட்டில் கலந்து விடவும்.

சுவையான புடலங்காய் பருப்பு கூட்டு ரெடி!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.