(Reading time: 1 - 2 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - சர்க்கரைப் பொங்கல்

தேவையான பொருட்கள்

அரிசி – 250 கிராம்

சிறுபருப்பு / பாசிப்பருப்பு – 125 கிராம்

வெல்லம் – 400 கிராம்

ஏலக்காய்

முந்திரி

திராட்சை

நெய்

தேங்காய் துருவல்

 

செய்முறை

ரிசி மற்றும் பருப்பை ஒன்றாக நன்கு குழைய வேக வைத்து தனியே வைக்கவும்.

 

வெல்லத்தை பொடி செய்துக் கொள்ளவும். அதனுடன் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.

 

அதை ஸ்டவ்வில் சிம்மில் வைத்து வெல்லம் நன்றாக கரையும் வரை கிண்டவும்.

 

வெல்லத்துடன் அரிசி, பருப்பை சேர்த்து கலக்கவும்.

 

இப்போது தேங்காய் துருவல், ஏலக்காய் சேர்த்து, கொதிக்க விடவும்.

 

தனியாக ஒரு கடாயில் நெய் சூடாக்கி, அதில் முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து, பொங்கலுடன் சேர்த்து கலக்கவும்.

 

சூடான, சுவையான சர்க்கரைப் பொங்கல் தயார்!

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.