Chillzee சமையல் குறிப்புகள் - ஈஸி பான் கேக்
தேவையான பொருட்கள்
1 1⁄4 கப் ஆட்டா மாவு
1 டேபிள்ஸ்பூன் சர்க்கரை
1 டேபிள்ஸ்பூன் பேக்கிங் பவுடர்
1⁄4 டீஸ்பூன் உப்பு
2 முட்டை
1 கப் பால்
4 டேபிள்ஸ்பூன் உருக்கிய வெண்ணெய்
3⁄4 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
1⁄3 கப் சாக்லேட் சிப்ஸ் (விருப்பம் இருந்தால்)
செய்முறை
ஒரு பாத்திரத்தில் ஆட்டா, சர்க்கரை, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து கலக்கி வையுங்கள்.
முட்டை, பால், வெண்ணெய், வெண்ணிலா எசன்ஸ் ஆகியவற்றை மாவுடன் சேர்த்து, அனைத்தும் கலந்து ஸ்மூத் ஆகும் வரை பீட் செய்யவும்.
இப்போது சாக்லேட் சிப்ஸ் சேர்த்து கலக்குங்கள்.
தோசைக் கல்லை சூடாக்கி, சின்ன சைஸ் தோசையாக மேலே செய்த மாவுக் கலவையை ஊற்றவும்.
மேலே குமிழ் வரத் தொடங்கும் போது திருப்பி போட்டு வேக வைக்கவும்.
இந்த பான் கேக்குகளுடன் சாப்பிட தனி சிரப் – மேபிள் சிரப், பான் கேக் சிரப் போன்றவை விற்கப் படுகின்றன.
அது கையில் இல்லையென்றால் பழங்கள், தேன், ஜாம் போன்றவற்றுடன் பான் கேக்குகளை சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.