(Reading time: 2 - 3 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - சிம்பிள் இட்லி சாம்பார் - அனிதா சங்கர்

Sambar

தேவையான பொருட்கள்

துவரம்பருப்பு –50g

சோம்பு   - 2 டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 4

பச்சை மிளகாய் –6

பெரிய வெங்காயம் –4

தக்காளி   -2

மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்

எண்ணெய் –சிறிதளவு

உப்பு  -தேவையான அளவு

தாளிக்க:

கடுகு  - 1 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு -1/2 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் –2

கறிவேப்பிலை  -சிறிதளவு

 

செய்முறை

துவரம்பருப்பை 15-20 நிமிடம் ஊறவைக்கவும்.

பருப்பு ஊறியதும் அதனுடன் காய்ந்த மிளகாய் மற்றும் சோம்பு சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

பிறகு கடாயில் எண்ணெய் விட்டு பச்சைமிளகாய் ,வெங்காயம்,தக்காளி சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் பருப்பு கலவையை தண்ணீர் சேர்த்து கரைத்து ஊற்றவும்(300ml  தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்) .தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்.

10-15 நிமிடம் கொதிக்க விடவும்.

பிறகு தாளிக்க கொடுத்துள்ள பொருள்களை தாளித்து இரக்கவும்.

சூப்பரான இட்லி சாம்பார் தயார்.

 

Hi friends, இது ஈஸியான ஒரு ரெசிப்பி. பருப்பு கலவையை கரைத்து ஊற்றின பிறகு அடிக்கடி சாம்பார  கிளறி விடுங்க.இல்லைன்னா அடிபிடிக்குற மாதிரி ஆகிடும். இந்த சாம்பார் திக்கா வரும் அதனால தண்ணீர் கொஞ்சம் நல்லாவே சேர்த்துக்கலாம்.

{kunena_discuss:794}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.