Chillzee சமையல் குறிப்புகள் - முருங்கை கீரை அடை
தேவையான பொருட்கள்
முருங்கை கீரை - 1 கப்
ராகி மாவு - 1 கப்
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2 (தேவைக்கேற்ப அதிகப்ப் படுத்திக் கொள்ளவும்)
எண்ணெய் –சிறிதளவு
உப்பு -தேவையான அளவு
செய்முறை
வெங்காயத்தை சிறிய துண்டுகளாக அரிந்துக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
கீரையை நன்கு கழுவிக் கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து, வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கை கீரை சேர்த்து நன்கு வதக்கவும்.
கீரை வதங்கிய பின், அதை ஒரு தட்டில் வைத்து ஆற விடவும்.
ஆறிய உடன், கீரையுடன், ராகி மாவு, உப்பு சேர்க்கவும். இந்த கலவையுடன், சிறிது சிறிதாக நீர் சேர்த்து, கொஞ்சம் பெரிய அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
ஒவ்வொரு உருண்டையாக எடுத்து கைகளால் அடையாக தட்டி, தோசைக் கல்லில் இடவும். சிறிது எண்ணெய் சேர்த்து இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்.
சட்னியுடன் சாப்பிட வெகு சுவையாக இருக்கும். சுவை மட்டும் அல்லாமல் சத்தும் நிறைந்த உணவு இது.
{kunena_discuss:794}