(Reading time: 2 - 3 minutes)
TV Specials
TV Specials

மூவி / டிவி ஸ்பெஷல்ஸ் – To All the Boys: P.S. I Still Love You

சென்சார் – TV 14

வகை – ரொமான்டிக் காமெடி

நடிப்பு – லனா கண்டோர், நோவா சென்டினியோ 

  

து ஒரு டீன் ஏஜ் ரொமான்டிக் படம்.

2018ல் வெளி வந்த “To All the Boys I've Loved Before” படத்தில் இரண்டாம் பாகம் இந்த படம்.

   

கதை

To All the Boys I've Loved Before:

டீன் ஏஜ் பெண் லாரா தனக்கு “கிரஷ்” இருப்பதாக நினைக்கும் ஆண்களுக்கு எழுதுவதுப் போல கற்பனை காதல் கடிதங்கள் எழுதி தன்னுடைய அறைக்குள் மறைத்து வைத்திருக்கிறாள்.

ஒருநாள் இந்த கற்பனை கடிதங்களை யாரோ அந்தந்த நபர்களுக்கு அனுப்பி வைத்து விடுகிறார்கள்.

இந்த எதிர்பாராத சம்பவத்தால் லாராவின் வாழ்க்கை குழப்பத்தில் தள்ளப்படுகிறது. ஆனால் அதுவே அவளுடைய உண்மையான காதலையும் சந்திக்கக் வாய்ப்பு அமைத்து கொடுக்கிறது.

 

To All the Boys: P.S. I Still Love You

To All the Boys I've Loved Before படத்தின் தொடர்ச்சியாக வந்திருக்கும் To All the Boys: P.S. I Still Love You படத்தில், முதல் பாகத்தில் வந்த லாராவும், பீட்டரும் காதலர்களாக நடிப்பதை விட்டு விட்டு நிஜ காதலர்களாக மாறுகிறார்கள்.

ஆனால் லாராவின் பழைய காதல் கடிதம் மீண்டும் அவள் வாழ்க்கையில் புது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. முன்பு லாராவிற்கு பிடித்த ஜான் அவளுடன் அந்த கடிதத்தை பற்றி பேசுகிறான். அவளிடம் ஆர்வத்தையும் காட்டுகிறான்.

இந்த புது குழப்பத்தை லாரா எப்படி கையாண்டாள் என்பது தான் மீதிக் கதை.

 

ரொமான்டிக் காமெடி வகை திரைப்படங்கள் உங்களுக்கு பிடிக்குமென்றால் இந்த படமும் உங்களுக்கு பிடிக்கும்.

பொழுதுபோக்கிற்கான படம் - 👍👍👍

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.