(Reading time: 2 - 3 minutes)
TV Specials
TV Specials

மூவி / டிவி ஸ்பெஷல்ஸ் – த்ரில்லர் - ரன்

சென்சார் – US - PG13

வகை – த்ரில்லர்

நடிப்பு – சாரா பால்சன், கியேரா ஆலன்

  

ன் (Run) என்பது 2020ல் வெளிவந்த த்ரில்லர் திரைப்படம்

   

கதை

யானுக்கு அவசர சிகிச்சை மூலம் pre matured பெண் குழந்தை பிறக்கிறது.

பதினேழு ஆண்டுகள் கடந்த நிலையில் சக்கர நாற்காலியில் இருக்கும் தன் மகள் க்லோயியை வீட்டிலேயே வளர்க்கிறார் டயான். அவளை ஸ்கூலுக்கு அனுப்பாமல் ஹோம் ஸ்கூல் செய்கிறார்.

க்லோயிக்கு பல விதமான நோய்கள் இருக்கிறது.

தொழில்நுட்பம் மற்றும் பொறியியலில் திறமை பெற்ற க்லோயி வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் படிக்க ஆசைப் படுகிறாள். அதற்கு அப்ளை செய்து அட்மிஷன் கிடைக்க காத்திருக்கிறாள்.

இந்த நிலையில் அம்மா தனக்கு தரும் ஒரு மாத்திரை தனக்கானது இல்லை என்பதை க்லோயி கண்டுப்பிடிக்கிறாள். ஆனால் டயான் அது அவளுக்கு தான் என்று சொல்கிறார். இதனால் க்லோயிக்கு அம்மா மேலே சந்தேகம் வருகிறது.

அந்த மாத்திரை பற்றி விசாரிக்க தொடங்கும் க்லோயி அது நாய்களுக்கு தசை தளர்வுக்கு கொடுக்கப் படும் மருந்து என்பதை தெரிந்துக் கொள்கிறாள். இதைப் பற்றி க்லோயி மேலும் தகவல்கள் சேகரிக்கும் முன்பு டயான் அவளை கண்டுப்பிடித்து தடுத்து விடுகிறார்.

இதிலிருந்து அம்மாவிற்கும் மகளிற்கும் நடுவே திருடன் – போலீஸ் விளையாட்டு போல தப்பிக்க முயற்சிப்பது, பிடிப்பது என நிகழ்வுகள் தொடர்கிறது.

டயான் ஏன் அப்படி நடந்துக் கொள்கிறார் என்பதை கண்டுப்பிடிக்க முயற்சி செய்கிறாள் க்லோயி. அதில் வெற்றிப் பெற்றாளா, அம்மாவுடன் இருந்து தப்பினாளா என்பது படத்தின் க்ளைமாக்ஸ்!

 

ம்மை பதற்றமடைய செய்யும் த்ரில்லர்!

த்ரில்லர் பட பிரியர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய படம். 👍👍👍👍

Trailer

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.