(Reading time: 2 - 4 minutes)

கொழு கொழுவென இருக்கும் குழந்தைகள் தான் ஆரோக்கியமானவர்களா???

Cute baby

கொழு கொழுவென இருக்கும் குழந்தைகள் தான் ஆரோக்கியமானவர்களா???

ஆம் குண்டாக இருக்கும் குழந்தைகள் தான் ஆரோக்கியமானவர்கள் எனும் தவறான கருத்து பலருடைய மனதில் இருக்கிறது.

உண்மையில் சரியான எடையுடன், துரு துரு வென இருக்கும் குழந்தைகள் தான் ஆரோக்கியமானவர்கள்.

 

Obesity எனும் உடல் பருமன் பிரச்சனை பெரியவர்களை போலவே குழந்தைகளுக்கு இருக்கின்றது என்பது தான் உண்மை.

இது பெரும்பாலும் மேலே சொன்னது போல பெரியவர்களின் மனதில் இருக்கும் தவறான எண்ணத்தினால் வரும் பிரச்சனை தான்.

 

பெரும்பாலான குழந்தைகள் நல மருத்துவர்களும் சிறு வயது முதலே குழந்தைகளிடம் obesityயை தவிர்க்க சொல்கிறார்கள்.

 

குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க இதோ சில எளிமையான டிப்ஸ்:

 

குழந்தைகளுக்கு நல்ல உணவு பழக்கத்தை சொல்லிக் கொடுங்கள். கன்னா-பின்னா என்று இல்லாமல் நேரத்திற்கு உணவு உண்பது தான் சிறந்த பழக்கம் என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள்.

 

பழங்களை ஜூஸாக கொடுப்பதை விட அதை அப்படியே பழமாக சாப்பிட பழக்கப் படுத்துங்கள்.

 

நாம் அன்றாடம் பயன்படுத்தும் கலோரி அதிகமான உணவு பொருட்களை (சர்க்கரை, மைதா, எண்ணெய் போன்றவை) குறைத்து, ஆரோக்கியமான உணவு பொருட்களை (பச்சைக் காய்கறிகள், பசும் பால், பழங்கள் போன்றவை) அதிகம் கொடுங்கள்.

 

குழந்தைகளுக்கு சமைக்கும் பொழுது எண்ணெய் மற்றும் மசாலா பொருட்களை குறைவாகவே பயன்படுத்துங்கள்.

 

குழந்தைகளை ஓடி விளையாட அனுமதியுங்கள்! உங்களின் போன், டேப் போன்றவற்றை கொடுத்து கேம்ஸ் விளையாட விடுவதை தவிருங்கள்!

 

ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை கொடுத்து பழக்கப் படுத்தாதீர்கள்!

 

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.