(Reading time: 2 - 3 minutes)

Tamil Jokes 2019 - வீட்டுக்கு வீடு வாசப்படி!!! 🙂 - அனுஷா

fun

ட்ஜ்: எதற்காக விவாகரத்து கேட்கிறாய்???

 

விண்ணப்பதாரர்:- ஐயா என் மனைவி என்னை தினமும் பூண்டு உறிக்கச் சொல்கிறாள்.

வெங்காயம் வெட்டச் சொல்கிறாள் ,

பத்து பாத்திரம் தேய்க்கச் சொல்கிறாள். என்னால் முடியவில்லை .

அதனால் விவாகரத்து தாருங்கள். ...

 

ஜட்ஜ்: - இதெல்லாம் காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது. உரிக்க வேண்டிய பூண்டை ஒரு பாட்டிலில் போட்டு மூடி நான்கு முறை குலுக்கினால் தோல் தன்னால் வரப்போகிறது. ,

அரிய வேண்டிய வெங்காயத்தை பத்து நிமிடம் பிரிடஜ்ல வைத்தால் ஈசியாகவும் வெட்டலாம் அரியும்போது கண்ணிலும் தண்ணீர் வராது. ,

பத்து பாத்திரத தையெல்லாம் பத்து நிமிஷம் தண்ணீரில் ஊறவைத்து விம் பாரால தேய்ச்சா சரியாபோயிடுது. ,

அப்படியும் போகலேண்ணா பேக்கிங் பவுடர் ஒரு சிட்டிகை போட்டு ஒரு ஸ்பூன் வினிகர் விட்டா எப்படிபட்ட தீச்சல் கடாயா இருந்தாலும்பளிச்சுண்ணு ஆயிடும்.,

அது மட்டுமில்ல துணிய சர்ப்ல ஊறவைக்கறதுக்கு முன்னாடி , நல்ல தண்ணியில ஒருதடவ நனைக்கணும்.

அதன் பின் சர்ப்ல ஊறவைச்சி மிஷிண்ல போட்டா, துணி தும்ப பூ மாதிரி இருக்கும்.

நீ சொன்ன காரணங்களுக்கொல்லாம் டைவர்ஸ் தரமுடியாது. புரிஞ்சதா...

 

விண்ணப்பதாரர்: ஐயா நல்லா புரிஞ்சதுங்க.

 

ஜட்ஜ் : என்ன புரிஞ்சது.?

 

விண்ணப்பதாரர்: எம் பொண்டாட்டி பூண்டு , வெங்காயம், பாத்திரத்தோட நிறுத்திகிட்டா, ஆன நீங்க துணியும் துவைக்கிறீங்க

 

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.