(Reading time: 2 - 3 minutes)

அழகு குறிப்புகள் # 71 - சருமம் மற்றும் கூந்தலுக்கு வேப்ப எண்ணெய் அளிக்கும் நன்மைகள்

வேப்பமரத்தின் இலை முதல் கிளை வரை அனைத்துமே மருத்துவ பண்புகளை கொண்டுள்ளது. பல ஆயுர்வேத மருந்துகளின் ஒரு முக்கிய அங்கமான வேப்ப எண்ணெய் சரும பராமரிப்புக்கும் மிகவும் நல்லது.

 

வேப்ப எண்ணெய் அளிக்கும் நன்மைகள்

சருமத்தின் எண்ணெய் உற்பத்தியை சமப்படுத்தவும், காயங்களை குணப்படுத்தவும், கொலாஜன் உருவாவதைத் தூண்டவும், முகப்பருவுக்குப் பிந்தைய வடுக்களைக் குறைக்கவும், தோல் அழற்சியைக் குறைக்கவும் வேப்ப எண்ணெய் மிகவும் நல்லது.

 

இது சருமத்தில் இருக்கும் வடுக்களை குறைக்கவும் உதவுகிறது.

 

பருக்கள் வராமல் தடுக்கவும் வேப்ப எண்ணெய் உதவுகிறது.

 

வெயிலினால் சருமத்தில் ஏற்படும் பாதிப்பை சரி செய்யவும் வேப்ப எண்ணெயை பயன்படுத்தலாம்.

 

வயதாகும் போது, நம் சருமத்தில் ​​கொலாஜன் உற்பத்தி குறையத் தொடங்குகிறது. இது சுருக்கங்கள் தோன்ற வழி வகுக்கிறது. வேம்பில் இருக்கும் வைட்டமின் சி சருமத்தில் கொலாஜன் இயற்கையாக உற்பத்தி ஆக உதவுகிறது. இதனால் வயதினால் தோன்றும் சுருக்கங்கள் வராமல் தடுக்க உதவுகிறது.

 

வேப்ப எண்ணெய் தலை முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது.

 

வேப்ப எண்ணெய் பொடுகை அகற்றவும் சிறந்த சிகிச்சையாக இருக்கிறது.

  

 

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.