(Reading time: 3 - 6 minutes)

ஆரோக்கியக் குறிப்புகள் - பெண்கள் மன அழுத்தம் நீங்கி ஆரோக்கியமாக இருக்க 5 ஈஸி குறிப்புகள்

பொதுவாகவே பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இந்த கொரோனா காலம் அதன் வாய்ப்புகளை மிகவும் அதிகப் படுத்தி இருக்கிறது.

அப்படி இல்லாமல் ஸ்ட்ரெஸ் எனும் மன அழுத்தத்தை துரத்தி அடிக்க சில ஈஸி குறிப்புகள்:

நட்பு வட்டம் மற்றும் உறவினர்களுடன் நேரம் செலவிடுங்கள்

சமூக தனிமை இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

எனவே நேரம் கிடைக்கும் போது தோழிகள், உறவினர்களுடன் நேரில் இல்லை என்றாலும் போனிள் பேசுங்கள்.

  

சுறுசுறுப்பாக இருங்கள்.

உடற்பயிற்சி எண்டோர்பின்களை அதிகரிக்கும். இது நல்ல மனநிலை கிடைக்க வழி வகுக்கும்.  மேலும் உடற்பயிற்சி மூலம் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் வாரத்தில் ஐந்து நாட்களுக்கு, ஒரு நாளுக்கு 30 நிமிடங்கள் விதம் ஏரோபிக் உடற்பயிற்சி செய்வதை பரிந்துரைக்கிறது.

நீங்கள் “20-2-8” விதியையும் பயன்படுத்தலாம்:

உட்கார்ந்திருக்கும் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், எட்டு நிமிடங்கள் நின்று இரண்டு நிமிடங்கள் நடைபயிற்சி செய்யுங்கள்.

ரு நாளைக்கு குறைந்தது 10,000 அடிகள் நடக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

எனவே சுறுசுறுப்பாக இருங்கள், உங்கள் மனமும் சுறுசுறுப்பாக மாறி விடும்.

 

என்ன சாப்பிடுகிறோம் என்ற கவனத்துடன் சாப்பிடுவதைப் பயிற்சி செய்யுங்கள்.

நீங்கள் உணவு உண்பதை வாழ்வின் சுமைகளை, அழுத்தங்களை சமாளிக்கும் வழிமுறையாகப் பயன்படுத்தினால், அதை கவனத்துடன் செய்ய முயற்சி செய்யுங்கள்.

ஆரோக்கியமான சிற்றுண்டிகளை பேக் செய்து எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது உங்களின் பக்கத்திலேயே வைத்துக் கொள்ளுங்கள். முடிந்த அளவு என்ன உண்ண போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு விடுங்கள்.

 

வாழ்க்கையின் பிரகாசமான பக்கத்தைப் பாருங்கள்.

மன நம்பிக்கை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. எங்கேயும் எதிலும் பாசிட்டிவான பக்கத்தைப் பாருங்கள்.

உதாரணமாக, ஒரு சமீபத்திய ஆய்வு, பாசிட்டிவான மன நம்பிக்கை இருப்பது கடுமையான கரோனரி நோய்க்குறியிலிருந்து (acute coronary syndrome) வெளி வர உதவுவதாக காட்டி இருக்கிறது.

குழந்தைகள் படிப்பு, வேலை, பணம் என எதிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் என்பதை உணருங்கள். எதையும் பாசிட்டிவாக எதிர்நோக்கி சமாளிக்கும் வழியைப் பாருங்கள்.

 

உங்களுக்காக நேரத்தை திட்டமிடுங்கள்.

சுய அக்கறை மிக மிக முக்கியம்!

குழந்தைகள், கணவர் மற்றவர்கள் என அனைவரையும் பராமரிப்பவர்களாக பெண்கள் மிகவும் பிஸியாக இருக்கிறார்கள். ஆனால் தங்களின் சொந்த ஆரோக்கியத்தை பேணாமல் புறக்கணிக்கிறார்கள்.

அப்படி இருக்காமல், நன்றாக சாப்பிடுவதற்கும், உடற்பயிற்சி செய்வதற்கும், பொழுதுபோக்குகளை சந்தோஷமாக அனுபவிப்பதற்கும் நேரம் ஒதுக்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

அது அரை மணி நேரமாக இருந்தாலும் உங்களுக்கு பிடித்த விதத்தில் செலவிடுங்கள்.

 

ந்த ஐந்தையும் சில நாட்கள் பின்பற்றி பாருங்கள், மாற்றம் கண் கூடாக தெரியும்.

    

2 comments

  • ரொம்ப ரொம்ப அவசியமான குறிப்பு! சில்சீயின் சேவைகளில் குறிப்பிடத்தக்கது! Truly Chillzee is multi-faceted and provider of vital information for good living!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.