ஆரோக்கியக் குறிப்புகள் - ஃபுட் பாய்சன்
பொதுவாக சரியாக சமைக்காத உணவை சாப்பிடுவது ஃபுட் பாய்சன் ஏற்பட வழிவகுக்கிறது.
உணவை சரியாக சூடாக்காமலோ, பாதுகாப்பாகவோ வைக்காமல் இருப்பதும் ஃபுட் பாய்சன் ஏற்பட காரணமாக அமையக்கூடும். ஆகையால், நோய்க்கிருமிகளை வீட்டிற்கு அழைக்க விரும்பாவிட்டால், சரியான முறையில் உணவை மீண்டும் சூடாக்குவதும் சேமிப்பதும் முக்கியம்.
சில நேரங்களில், கைகளை சரியாகக் கழுவாமல் உணவைத் தயாரிப்பதும் ஃபுட் பாய்சன் அபாயத்தை ஏற்படுத்தும்.
ஃபுட் பாய்சன் அறிகுறிகள்
எந்த பாக்டீரியா அல்லது வைரஸின் பாதிப்பால் ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது என்பதைப் பொறுத்து ஃபுட் பாய்சன் அறிகுறிகள் வேறுபடுகின்றன.
பொதுவான அறிகுறிகள்:
குமட்டல்
வயிற்றுப்போக்கு
வயிற்றுப் பிடிப்புகள்
வாந்தி
பசியின்மை
பலவீனம்
லேசான காய்ச்சல்
எந்த வகையான நோய்க்கிருமிகளால் ஃபுட் பாய்சன் ஏற்பட்டு இருக்கிறது என்பதை அறிய மருத்துவர்கள் மல பரிசோதனை செய்ய சொல்வார்கள்.
எண்ணெய் மற்றும் ஸ்பைஸ் இல்லாத உணவுகள் உண்பது ஃபுட் பாய்சனில் இருந்து உங்கள் உடல் வேகமாக மீண்டு வர உதவும்.