(Reading time: 2 - 4 minutes)

ஆரோக்கியக் குறிப்புகள் - ஏன் சர்க்கரை நிறைந்த குளிர்பானங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு மோசமானது?

குளிர்பானங்கள் பல பிராண்ட்களில் வருகின்றது. அவற்றில் இருக்கும் சர்க்கரை அளவை பற்றி நம்மில் பலரும் கவலைப் படுவதில்லை.

ஆனால் அப்படி சர்க்கரை நிறைந்த குளிர்பானங்களை குடிப்பது நம் உடலுக்கு பல விதங்களில் பாதகங்கள் விளைவிக்கும்.

  

குளிர்பானங்களால் ஏற்படும் ஆரோக்கிய சீர்கேடுகள்:

குளிர்பானங்களில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் எதுவும் இல்லை - வெறும் சர்க்கரை தான இருக்கிறது.

 

சர்க்கரை நிறைந்த குளிர் பானங்களை எவ்வளவு குடித்தாலும் அது உங்களுக்கு வயிறு நிறைந்த முழுமையான உணர்வை கொடுக்காது. அதனால் அதிகம் உட்கொள்வீர்கள். விளைவு – உடல் எடை அதிகரிக்கும்.

 

நாம் உட்கொள்ளும் சர்க்கரையின் அதிக அளவு கல்லீரலில் கொழுப்பாக மாறி உறைந்துவிடும்.

 

தொப்பை வருவதற்கு சர்க்கரை நிறைந்த குளிர்பானங்கள் முக்கிய காரணம்

  

சர்க்கரை நிறைந்த பானங்கள் இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்தக்கூடும். இதனால் சர்க்கரை, இதய நோய்கள் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும்.

  

அதிக சர்க்கரை கலந்த பானங்கள் சர்க்கரை வியாதி வருவதற்கு முக்கிய உணவு காரணமாக இருக்கிறது.

 

அதிக அளவு சர்க்கரை உட்கொள்வது லெப்டின் எதிர்ப்பை ஏற்படுத்தக்கூடும். இதனால் நம் உடல் கொழுப்பை கரைக்கும் தன்மையை இழந்து கொழுப்பை சேமிக்க துவங்கி விடும்.

 

சர்க்கரை நிறைந்த பானங்கள் நம்மை அதற்கு மெல்ல அடிமையாக (addiction) மாற்றி விடக் கூடியவை.

   

சர்க்கரை பானங்கள் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடியவை.

  

குளிர்பானங்கள் குடிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் அதிக ஆபத்து உள்ளது

 

குளிர்பானத்தில் உள்ள சர்க்கரை மற்றும் அமிலங்கள் பல் ஆரோக்கியத்திற்கு பேரழிவு கொடுக்க கூடியவை.

  

சர்க்கரை நிறைந்த பானங்கள் குடிப்பவர்களுக்கு முடக்கு வாதம் ஏற்படும் ஆபத்து அதிகமுள்ளது

 

அதிக சர்க்கரை நுகர்வு நம் மூளையின் செயல்பாட்டை பாதிக்கும் இதனால் வயதாகும் போது மறதி ஏற்படும் வாய்ப்புகள் அதிகமுள்ளது.

    

னவே சர்க்கரை நிறைந்த குளிர்பானங்களை தவிர்த்து இயற்கையான மோர், இளநீர் போன்றவற்றை பருகத் தொடங்குங்கள், ஆரோக்கியமாக வாழுங்கள்.

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.