(Reading time: 14 - 27 minutes)

பொது - மே மாத சிறப்புகள் / முக்கிய தினங்கள் - சசிரேகா

may

மே 1

உலகத் தொழிலாளர் தினம்

(International Labour Day)

உலகத் தொழிலாளர் தினம், உழைப்பாளர் தினம், மே தினம் என்பன 8 மணி வேலை நேரம் கேட்டுப் போராடியதால் பிறந்தது. அமெரிக்கா, ஐரோப்பா, கியூபா, சிலி போன்ற நாடுகள் 1890ஆம் ஆண்டில் மே – 1 ஐ தொழிலாளர்கள் தினமாகக் கடைப்பிடித்தனர். இதே சமயத்தில் சர்வதேச பொதுவுடமை மற்றும் தொழிற்சங்க மாநாடு 8 மணி நேர வேலையை உலகம் முழுவதும் கொண்டு வர மே – 1 ஐ தொழிலாளர் தினமாக கொண்டாட அறைகூவியது.

 

மே 2

உலக ஆஸ்துமா தினம்

(World Asthma Day)

ஒருவருக்கு தொடர்ந்து சளி பிடித்தால் அவர்களுக்கு 50 முதல் 70 சதவீதம் வரை ஆஸ்துமா வர வாய்ப்புள்ளது. இந்த நோயினால் உலகம் முழுவதும் 30 கோடி பேர் பாதிப்படைந்துள்ளனர். சிகரெட் புகை, காற்று மாசுபாடு, பாஸ்ட்புட், பவுடர், வாசனை திரவியம் பூசுதல் போன்ற காரணங்களால் ஆஸ்துமா நோய் ஏற்படுகிறது. ஆஸ்துமா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினம் 1999ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.

 

மே 3

உலக பத்திரிகைச் சுதந்திர தினம்

(World Press Freedom Day)

பத்திரிகை சுதந்திரம் என்பது மனித உரிமைகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையும் இதனை அங்கீகரித்து 1973ஆம் ஆண்டு மே 3 ஐ உலக பத்திரிகை சுதந்திர தினமாக அறிவித்தது. அடிப்படை உரிமைகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் பத்திரிகை சுதந்திரம் இருக்க வேண்டும் என யுனெஸ்கோ கூறுகிறது. மேலும் பத்திரிகையையும், பத்திரிகை சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்கிறது.

மே 3 - ஹோலிகிராஸ் டே

 

மே – 4

சர்வதேச தீயணைக்கும் படையினர் நாள்

(International Fire Fighter’s Day)

ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே தீயணைப்புப் படையினர் தினம் கொண்டாடி வந்தனர். 1999ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும்போது 5 வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களை நினைவுகூருவதற்காக உலகம் முழுவதும் மின்னஞ்சல் மூலம் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் மே 4 ஆம் நாள் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

 

மே – 5

சர்வதேச மருத்துவச்சி நாள்

(International Midwives Day)

மருத்துவச்சி என்பவர் பிரசவம் பார்ப்பவர், தாய் சேய் செவிலி, பேறுகாலப் பணிமகள் மற்றும் மகப்பேறு உதவியாளர் என பலப் பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். தாய் மற்றும் சேய் ஆகியோரின் நலனைப் பாதுகாப்பவர்களாக பணி புரிகின்றனர். இவர்களின் அறிவு, திறமை மற்றும் சேவையை போற்றும் வகையில் 1991ஆம் ஆண்டுமுதல் இத்தினம் உலகில் ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

மே 5 - காரல்மார்க்ஸ் பிறந்த நாள்

கார்ல் மார்க்சு என்கிற கார்ல் என்ரிச் மார்க்சு (Karl Heinrich Marx, கார்ல் என்ரிச் மார்க்ஸ்-மே 5, 1818, செருமனி–மார்ச் 14, 1883, இலண்டன்) செருமானிய மெய்யியலாளர்களுள் ஒருவராவார். அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகக் கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார். பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார் என்றாலும் இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்தது. பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்சு கருதப்படுகிறார்.

 

மே – 6 - International No Diet Day

 

மே–7-World Athletics Day, தாகூர் பிறந்த நாள்

இரவீந்தரநாத் தாகூர் (வங்காள மொழி: மே 7, 1861- ஆகஸ்ட் 7, 1941) புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவரும் இவரே. மக்கள் இவரை அன்புடன் குருதேவ் என்று அழைப்பதுண்டு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.