(Reading time: 22 - 43 minutes)

பொது - பிள்ளையாருக்கு எது பிடிக்கும்? – சசிரேகா

pilaiyar

காலையில் 7 மணி

”வள்ளி வள்ளி” என அழைத்துக் கொண்டே வந்தார் தாத்தா புண்ணியக்கோட்டி. அவரது அழைப்பில் வள்ளி பாட்டியும் பூஜையறையிலிருந்து பதில் தந்தார்

”நான் இங்க இருக்கேன் ஏன் இப்படி கத்தறீங்க” என சலிப்பாக சொல்ல தாத்தாவோ

”நேரம் போகுது இன்னும் எதுவும் ஆரம்பிக்கலையா? இப்படியிருந்தா எப்படி நீதானே இந்த வீட்டுக்கு மூத்தவ நீயே இப்படி சோம்பேறியா இருக்கலாமா” என கேட்க அவரோ கோபத்துடன்

“இப்பதானே வீட்ல இருக்கிறவங்க ஒவ்வொருத்தரா எழுந்தாங்க, இனிமேல குளிச்சிட்டுதான் வரனும், அதுக்கப்புறம் பிள்ளையார் சிலை வாங்கி வரனும், உங்க பையன் பட்டாபியையும் பேரன் சேதுவையும் கூட்டிட்டுப் போய் சிலையை வாங்கிட்டு வராம இங்கயே நின்னு என்னையே குறை சொன்னா எப்படி, இதோ பூஜை ரூமை ரெடிபண்ணிட்டேன் நீங்க போய் சிலையை வாங்கிட்டு வந்து வைங்க பேசினது போதும் கிளம்புங்க” என சொல்ல தாத்தாவும் மற்றவர்களை தேடிச் சென்றார்.

அது பெரிய வீடு என்பதாலும் அன்று வேறு விடுமுறை என்பதாலும் அனைவரும் குளித்து ரெடியாகி முற்றத்திற்கு வந்து அமர்ந்து கதைகளை பேசிக் கொண்டிருந்தார்கள். அதில் தாத்தாவின் மகன் பட்டாபியும் அவனது மனைவி மகாலட்சுமியும், அடுத்த மகன் கைலாசம் அவரது மனைவி சிவகாமி மற்றும் அவரது பேரன்களான விசு, சங்கரன், சேது, பேத்திகள் சுந்தரி, கௌரி, தாரா  கடைசி 3 வயதான சுப்ரஜாவை மடியில் படுக்க வைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தாள் கடைசி மகன் கணபதியி்ன் மனைவி செந்தாமரை.

அனைவரையும் கண்ட தாத்தா கோபமுடன்

”இங்கதான் இருக்கீங்களா ஏன்பா கைலாசம் சட்டுன்னு போய் பிள்ளையார் சிலையை வாங்கிட்டு வரக்கூடாதா, அங்க உன் அம்மா பூஜை அறையை சுத்தம் பண்ணிட்டா இன்னும் நீ இப்படி மச மசன்னு பேசிக்கிட்டு இருந்தா எப்படிப்பா கிளம்புங்க” என அவர் சத்தம் போட அதற்கு கைலாசத்தின் மகள் கௌரி

”தாத்தா நாங்க ஒண்ணும் தேவையில்லாததை பேசிக்கலை, இன்னிக்கு பிள்ளையார் சதுர்த்தி அதனால அதைபத்தி பேசிக்கிட்டு இருக்கோம், எங்களுக்குள்ள ரொம்ப குழப்பம் வந்துடுச்சி, நாங்க சண்டை போடவே ஆரம்பிச்சிட்டோம் நீங்க வந்ததால நிப்பாட்டினோம்” என சொல்ல அந்நேரம் அங்கு வந்த வள்ளி பாட்டியோ

”அப்படி எதைப்பத்தி பேசிட்டு இருந்து சண்டை வரைக்கும் போனீங்க” என கேட்க அதற்கு அவரின் பேரன் சேது

”பாட்டி பிள்ளையார் பண்டிகையாச்சே அதான் பிள்ளையாருக்கு எது பிடிக்கும்னு பேசிக்கிட்டு இருந்தோம், நான் ஒண்ணு சொன்னேன் அவள் ஒண்ணு சொன்னா இப்படியே ஆளாளுக்கு ஒவ்வொண்ணா சொன்னோம் கடைசி வரைக்கும் பிள்ளையாருக்கு எது ரொம்ப பிடிக்கும்னு தெரியலை பாட்டி அதான் குழப்பமே” என சொல்ல பாட்டியோ

“சரிப்பா அதைப்பத்தி அப்புறம் பேசலாமே, முதல்ல போய் சிலையை கொண்டு வந்து வைங்க நல்ல நேரம் போயிடும்” என சொல்ல பாட்டியின் மூத்த மகன் பட்டாபியோ

”ஆர்டர் கொடுத்த இடத்தில இன்னும் 2 மணி நேரம் ஆகுமாம், நமக்கு மட்டும் இல்லை அவங்க மத்தவங்களுக்கும் செய்றாங்கள்ல அதான் பெயின்ட் வேலை சில சில இடங்கள்ல பூசாம இருக்காம் அது முடிஞ்சதும் அவனே போன் பண்றானாம் அப்புறம் போய் வாங்கறோம்” என சொல்ல அவரது மகள் சுந்தரி பாட்டியிடம்

”ஆமாம் பாட்டி இன்னும் நிறைய நேரம் இருக்கு, இப்படி வந்து உட்காருங்க எங்க பிரச்சனையை கேளுங்க அதற்கு ஒரு தீர்வு சொல்லுங்க பாட்டி” என சொல்ல உடனே தாத்தா அவ்விடத்தில் ஒரு சேரில் அமர்ந்துக் கொண்டு

”நான் தீர்ப்பு சொல்றேன்” என ஆரம்பிக்க பாட்டியும் அமைதியாக அமர்ந்துக் கொண்டு

”சுப்ரஜாவை இப்படியே எவ்ளோ நேரம் வைச்சிக்கிட்டு இருப்ப, பூஜை ஆரம்பிக்கறப்ப அவளை எழுப்பினா போதுமே அவளை தூங்க வைக்கலாமே” என கேட்க அதற்கு செந்தாமரையோ

”அத்தை இவள் தூங்கலை, அழுதுக்கிட்டே இருக்கா, ஆளுங்க இப்படி பேசினா அவளும் கொஞ்சம் பயமில்லாம இருப்பா இப்ப பாருங்க அழாம இருக்கா அதான் இங்கயே வைச்சிருக்கேன்” என சொல்லி மடியில் இருந்த சுப்ரஜாவை மெல்ல தட்டிக் கொடுத்து உறங்க முயற்சி செய்வதைப் பார்த்த பாட்டி அவளிடம்

“பார்த்தும்மா காலை நேரம் நசநசன்னு நைட்டெல்லாம் மழை பெஞ்சது. இப்பதான் தெளிவாயிருக்கு ஆனாலும் மேகம் மூட்டமாதான் இருக்கு அப்புறம் குழந்தைக்கு சட்டுன்னு ஈரம் கட்டிக்கும்” என சொல்லவே

”நான் பார்த்துக்கறேன் அத்தை” என செந்தாமரை சொல்லவும் தாத்தா அனைவரையும் பார்த்து

”சரி உங்க பிரச்சனை என்ன? பிள்ளையாருக்கு எது பிடிக்கும் அதானே சரி உங்க வாதங்களை ஒவ்வொருத்தரா சொல்லுங்க கேட்போம், அப்புறம் ஒரு முடிவுக்கு வருவோம்” என சொல்ல முதலில் பட்டாபி பேசினார்

”அப்பா எனக்குத் தெரிஞ்சி பிள்ளையாருக்கு பிடிச்சது அருகம்புல்தானே”

என சொல்ல தாராவோ

”அருகம்புல்லா இல்லை இல்லை பிள்ளையாருக்கு பிடிச்சது கொழுக்கட்டைதானே” என சொல்ல தாத்தாவோ தாராவிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.