(Reading time: 22 - 43 minutes)

”அப்படிப்பார்த்தா பிள்ளையார்க்கு பிடிச்சது ஏன் அவரோட சிலையா கூட இருக்க கூடாது சொல்லுங்க பிள்ளையார் வழிபாடு ரொம்ப எளிமையானது. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்யனும்னு ஆகமங்கள் கூறினாலும் இன்னும் பலர்  மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் இதுல கூட சிலையை வடிவமைக்கிறாங்களே. புற்றுமண், அரைத்தமாவு, சாளக்கிராமம்(நர்மதை நதிக்கல்) இதை வைச்சி ஒரு கைப்பிடி பிடிச்சாலே போதுமே அது பிள்ளையாராகிடும்” என சொல்ல அதற்கு பாட்டியோ

”அதுக்கு காரணம் இருக்கு, பிள்ளையாரோட ஒரு கைப்பிடியிலதான் இந்த உலகமே இருக்கு அதனாலதான் அவரை நாம ஒரு கைப்பிடியில பிடிச்சா இந்த உலகத்தையே வெல்லலாம்னு சொல்வாங்க, இந்த மண்ணில் பிறக்கற ஒவ்வொருத்தரும் ஒரு நாள் இந்த  மண்ணுக்கே சொந்தமாவாங்க அதை விளக்கத்தான் இப்படி எல்லாம் சொல்றாங்க” என சொல்லவும் உடனே சுந்தரியோ

”சிலை இருந்தா போதுமா அதுக்கான வழிபாடுகள் இருக்கனுமே, தினமும் பூஜை செஞ்சாதானே பலன் உண்டு. யாரா இருந்த்தாலும் பிள்ளையாரோட அருள் கிடைக்கனும்னா பூஜை செய்யனும். பிள்ளையாரை தங்கத்தாலோ அல்லது தாமிரத்தாலோ அல்லது படத்திலோ பல இடங்கள்ல பூஜை செய்றாங்க. இப்படி பூஜை செஞ்சா விநாயகப் பெருமான் கட்டாயம் நாம கேட்கற வரங்களைத் தருவாரே அப்ப பூஜை முறைதானே அவருக்கு ரொம்பப் பிடிக்கும்.” என சொல்லி அவள் மகிழ உடனே பாட்டியோ

”பூஜைன்னு சொன்னதும் ஞாபகத்துக்கு வருது. பிள்ளையார் சிலை கொண்டு வந்தப்பின்னாடி அவருக்கு நிவேதனம் செய்ய 21 பொருட்கள், 21 மலர்கள், 21 இலைகளை படைக்கனும் அதுக்கு ஏற்பாடு பண்ணியாச்சா” என தன் 2 மருமகள்களை பார்த்து கேட்க அதற்கு விசு பாட்டியிடம்

”அது என்ன பாட்டி 21 நெம்பர், கணக்கால இருக்கு பூஜை செய்ய என்ன தேவை பூக்கள் கொஞ்சம், படையல் கொஞ்சம் அப்புறம் இலைன்னு சொன்னா அது அருகம்புல்தானே நீங்க என்ன இவ்ளோ பில்டப் பண்றீங்களே” என சொல்ல பாட்டி உடனே

”அது அப்படியில்லை விசு எல்லா நாளும் போல இன்னிக்கு கிடையாது, இன்னிக்கு விநாயகர் சதுர்த்தி நம்மால முடிஞ்ச அளவுக்கு அதைச் சிறப்பா செய்யனும்ல அதனாலதான். இன்னிக்கு பிள்ளையாருக்கு நாம செய்ற ஒவ்வொரு விசயமும் செயலும்தான் நமக்கு பலனை அள்ளித்தரும்.”

“சரி பாட்டி ஒத்துக்கறேன் அது என்ன 21-ன்னு கணக்கு அதைச் சொல்லுங்க” என விசு கேட்க அதற்கு வள்ளி பாட்டியோ

”சொல்றேன். பொறுமையா கேளு அப்புறம் நான் சொல்றதை எழுதி வைச்சிக்குங்க என அவர் சொன்னதும் கௌரி ஒரு நோட் புக் எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்தாள். பாட்டி சொல்ல சொல்ல எழுதலானார்.

பாட்டியும் விசுவிடம்

”நிவேதனம்  செய்ற பொருட்கள் 21 அதாவது மோதகம், அப்பம், அவல், பொரிகடலை, கரும்பு, சுண்டல், சுகியன், பிட்டு, தேன், தினை மாவு, பால், பாகு, கற்கண்டு,  சர்க்கரைப் பொங்கல், பாயசம், முக்கனிகள், விளாம்பழம், நாவற்பழம், எள்ளுருண்டை, வடை, அதிரசம்

அப்புறம் மலர்கள் 21  புன்னை, மந்தாரை, மகிழம், பாதிரி, தும்பை, அரளி, ஊமத்தை, சம்பங்கி, மாம்பூ, தாழம்பூ, முல்லை, கொன்றை, எருக்கு, செங்கழுநீர்,  செவ்வரளி, வில்வம், குருந்தை, பவளமல்லி, ஜாதிமல்லி, மாதுளம், கண்டங்கத்திரி

அடுத்து அபிஷேகப் பொருட்கள் 21 அதாவது தண்ணீர், எண்ணெய், சீயக்காய், சந்தனாதித்தைலம், மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவியப் பொடி, பஞ்சகவ்யம்,  ரஸப்பஞ்சாமிர்தம், பழப்பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கருப்பஞ்சாறு, பழ ரகங்கள், இளநீர், சந்தனம், திருநீறு, குங்குமம், பன்னீர்

கடைசியா 21 வகையான இலைகள் மாசி, பருஹதி எனும் கிளா இலை, வில்வம், அருக்கு, ஊமத்தை, இலந்தை, நாயுருவி, துளசி, மாவிலை, தங்க அரளி, விஷ்ணு கிரந்தி,  மாதுளை, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, நாரிசங்கை, வன்னி, அரசு, நுணா, எருக்கு, தேவதாரு.” என பாட்டி சொல்லி முடிக்க விசு வியப்பின் உச்சத்தில் வாவ்வ்வ்வ் என சத்தமாக உச்சரிக்க அதைக் கேட்டு அனைவரும் சிரித்தார்கள்.

கௌரியோ பாட்டி சொன்னதை எழுதிவிட்டு உடனே தன் கருத்தை சொல்லலானாள்

”ஆனா பாட்டி இதோட முடியுதா என்ன வெறும் இந்த பொருட்களை வைச்சி கும்பிட்டா போதுமா வேற எதுவும் நாம செய்ய வேணாமா”

”நிறைய இருக்கு கௌரி, உதாரணத்துக்கு எல்லா விதமான பூஜைகளும் நிவேதனங்களும் படையல்களையும் தாண்டி முதலில் கேட்பது மந்திரங்களே, மனிதர்கள் உச்சரிக்கும் மந்திரங்களால் முதலில் சாமிக்கு மகிழ்ச்சி கிடைக்கும். யார் ஒருத்தர் சாமியோட காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கிறாரோ அவருக்கு உடனே சாமி அருள் கிடைச்சிடும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.