(Reading time: 2 - 4 minutes)

பொது - வளையல்களை அணிவதன் பின்னிருக்கும் அறிவியல்!

bangles 

 

ளையல் அணியும் பழக்கம் என்பது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நம் நாட்டில் இருக்கும் ஒரு வழக்கம்.

இன்றைய மாடர்ன் யுகத்திலும் இந்திய பெண்கள் பலரும் வண்ணமயமான வளையல்களை விரும்பி அணிகிறார்கள்.

 

வளையல்களின் அறிவியல்:

பழங்கால நாட்களில் ஆண்கள் காட்டிற்கு சென்று உடல் தளர வேலை செய்தார்கள். பெண்களோ வீட்டில் இருக்கும் வேலைகளை கவனித்துக் கொண்டார்கள்.

வீட்டு வேலை என்பதன் அளவும் அதிகம் என்றாலும் அது எப்போதும் உடலை அசைத்து செய்யும் கடின உழைப்பாக இருக்காது. எனவே ரத்த அழுத்தம் அதிகமாகலாம். இதனால் பொறுமையின்மையும் ஏற்படலாம்.

மனித உடலில் மணிக்கட்டு என்பது மிகவும் முக்கியம் வாய்ந்தது. மருத்துவர்கள் பலரும் மணிக்கட்டில் இருந்தே இதயத் துடிப்பை (pulse) சரி பார்க்கிறார்கள் என்பது நாம் அறிந்ததே.

நாம் அணியும் வளையல்கள் கை மணிக்கட்டின் அருகிலேயே இருக்கின்றன. அவை உராயும் போது ரத்த ஓட்டம் அதிகமாகிறது.

எனவே ரத்த அழுத்தம் சீராக உதவுகிறது.

 

பிரென்ட்ஸ் சமீபத்தில் வெளியாகி இருக்கும் குழந்தைகளுக்கான ஆங்கில திரைப்படம் “Small foot”ல் காலம் காலமாக வரையறுக்கப் பட்டிருக்கும் சில பழக்கங்கள் / சட்டங்களை பின் பற்ற வேண்டும் என்று சொல்லும் ஒரு காட்சி வரும். அதை படத்தில் சிலர் அப்படியே கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுவார்கள், சிலர் ஏன் என்று கேள்வி கேட்பார்கள். அப்படி ஏன் என்று கேட்கும் போது தான் அறிவு (knowledge) பகிரப்படும் என்றும் படத்தில் சொன்னார்கள்.

அந்த படம் பார்த்த பின் எழுந்த ஆர்வக் கோளாறின் விளைவாக வந்திருக்கும் கட்டுரை தான் இது 😊

இங்கே பகிரப் பட்டிருக்கும் காரணம் சரியா, தவறா, அல்லது உங்களுக்கு தெரிந்த வேறு விபரங்கள் என எதுவாக இருந்தாலும் தயக்கமின்றி பகிருங்கள். படிப்பவர்களுக்கு உதவும்! 👍 

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.