(Reading time: 2 - 4 minutes)

பொது - எப்போதும் தானே மூச்சு விடுகிறோம், பிறகு ஏன் மூச்சு பயிற்சி?

breathing 

ன்றைய நவீன உலகில், மக்கள், பொதுவாக மூச்சு விடும் போது, தாங்கள் சுவாசித்த காற்றினால் நுரையிரல் நிரம்பும் விதத்தில் மூச்சு காற்றை உள்ளிழுப்பதில்லை.

மேலோட்டமாக காற்றை உள்ளிளுழுத்து வெளியே விடுகிறார்கள்.

இதனால் காற்றை நன்றாக உள்ளிழுத்து வெளியே விடுவதனால் ஏற்படும் பல நல்ல பலன்களை இழக்கிறார்கள்.

அப்படி மூச்சுக் காற்றை முழுவதுமாக உள்ளிழுத்து வெளியே விடுவதையே மூச்சு பயிற்சி என்று சொல்கிறோம்.

மூச்சு பயிற்சி செய்வதால் ஏற்படும் பலன்கள்:

1. ஆற்றல் (energy) அதிகமாகும்

2. இதய துடிப்பு சீராகும்

3. நுரையீரலை சுத்தம் செய்ய உதவும்

4. பதற்றம் / கவலை குறையும்.

 

இதனால் தான் பதற்றமான நேரங்களில் ஆழ்ந்த மூச்செடுத்து நம்மை அமைதி படுத்திக் கொள்ள சொல்வார்கள்.

எனவே நேரம் கிடைக்கும் போது ஆழ்ந்து சுவாசியுங்கள்!

 

பிரென்ட்ஸ் சமீபத்தில் வெளியாகி இருக்கும் குழந்தைகளுக்கான ஆங்கில திரைப்படம் “Small foot”ல் காலம் காலமாக வரையறுக்கப் பட்டிருக்கும் சில பழக்கங்கள் / சட்டங்களை பின் பற்ற வேண்டும் என்று சொல்லும் ஒரு காட்சி வரும். அதை படத்தில் சிலர் அப்படியே கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுவார்கள், சிலர் ஏன் என்று கேள்வி கேட்பார்கள். அப்படி ஏன் என்று கேட்கும் போது தான் அறிவு (knowledge) பகிரப்படும் என்றும் படத்தில் சொன்னார்கள்.

அந்த படம் பார்த்த பின் எழுந்த ஆர்வக் கோளாறின் விளைவாக வந்திருக்கும் கட்டுரை தான் இது 😊

இங்கே பகிரப் பட்டிருக்கும் காரணம் சரியா, தவறா, அல்லது உங்களுக்கு தெரிந்த வேறு விபரங்கள் என எதுவாக இருந்தாலும் தயக்கமின்றி பகிருங்கள். படிப்பவர்களுக்கு உதவும்! 👍 

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.