(Reading time: 2 - 4 minutes)

பொது - சாம்பாருடைய கதை

Sambar 

சாம்பார் கண்டுபிடிக்கப் பட்ட கதை சாம்பாரை போலவே சுவையானது.

 

ஹுஹும் சாம்பார் தென் இந்தியர்களால் கண்டுபிடிக்கப்படவில்லை!!!

 

சாம்பார் கண்டுபிடிக்கப் பட்ட கதை இது தான்.

சோழ மன்னர்களின் தலைநகராக விளங்கிய தஞ்சாவூர் அவர்களின் ஆட்சிக்கு பின் பல ராஜ வம்சங்களின் கீழ் இருந்து 1674ல் மராத்தா மன்னர்களின் ஆட்சியின் கீழ் வந்தது.

அப்படி தஞ்சாவூரை ஆட்சி செய்த மராத்தா மன்னர் ஷாஹுஜியின் அரண்மனையில் அம்டி (amti) எனும் குழம்பு வகையை சில மாற்றங்களுடன் செய்ய முயற்சி செய்தார்களாம்.

பராம்பரியமாக அம்டி செய்ய பயன் படுத்தப் படும் பாசி பருப்புக்கு பதிலாக துவரம் பருப்பையும், kokumக்கு பதிலாக புளி கரைசலையும் பயன்படுத்தினார்கள்.

அன்று அரண்மனைக்கு விருந்தாளியாக வந்திருந்த மராத்தா மன்னர் சாம்பாஜியை கௌரவிக்கும் விதத்தில் அதற்கு சாம்பார் என்று பெயர் சூட்டினார்கள்.

அதுவே அரண்மனைக்கு வெளியிலும் பிரபலமாகி நம்முடைய தென் இந்திய ஸ்பெஷல் சாம்பாராக மாறி போனது!

 

எப்படி இருக்கிறது சாம்பார் கண்டுபிடிக்கப் பட்ட கதை!!!!

 

பிரென்ட்ஸ் சமீபத்தில் வெளியாகி இருக்கும் குழந்தைகளுக்கான ஆங்கில திரைப்படம் “Small foot”ல் காலம் காலமாக வரையறுக்கப் பட்டிருக்கும் சில பழக்கங்கள் / சட்டங்களை பின் பற்ற வேண்டும் என்று சொல்லும் ஒரு காட்சி வரும். அதை படத்தில் சிலர் அப்படியே கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுவார்கள், சிலர் ஏன் என்று கேள்வி கேட்பார்கள். அப்படி ஏன் என்று கேட்கும் போது தான் அறிவு (knowledge) பகிரப்படும் என்றும் படத்தில் சொன்னார்கள்.

அந்த படம் பார்த்த பின் எழுந்த ஆர்வக் கோளாறின் விளைவாக வந்திருக்கும் கட்டுரை தான் இது 😊

இங்கே பகிரப் பட்டிருக்கும் காரணம் சரியா, தவறா, அல்லது உங்களுக்கு தெரிந்த வேறு விபரங்கள் என எதுவாக இருந்தாலும் தயக்கமின்றி பகிருங்கள். படிப்பவர்களுக்கு உதவும்! 👍 

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.