(Reading time: 2 - 3 minutes)

பொது - சித்திரம் பேசுதடி - 03 - படிப்பும், பண்பும் - ப்ரீத்தி R

kids 

குழந்தை வளர்ப்பு மிக அழகான கலை, ஆனால் மிக கடினமானதும் கூட, அதுவும் பெண் குழந்தைகளை வளர்ப்பது மிக கடினம்,

கூட்டு குடும்பங்கள் நிறைந்த அந்த காலத்தில் குழந்தைகளை வளர்ப்பது ஒரு பொருட்டு அல்ல, ஆனால் இன்று அவசர வழக்கை சூழலில் குழந்தைகளை அவர்கள் போக்குக்கு விட்டு, ஏனோதானோ என்று வளருகிறார்கள்,

நல்ல பழக்க வழக்கங்கள் சொல்லிக்கொடுப்பதில்லை, வீட்டிற்கு வருபவர்களுக்கு எப்படி உபசரிப்பது, மரியாதையை கொடுப்பது என்று எதுவுமே தெரியாமல் வளர்கிறர்கள்,

படிப்புமட்டுமே போதும் என்று பண்பாட்டை மறந்துவிடுகிறோம், அதனால் தான் இன்று நிறைய விவாகரத்துகள் நடக்கிறது,

எனவே படிப்போடு சேர்த்து பண்புகளையும், நமது கலாச்சார வழக்கத்தையும் இன்றைய குழந்தைகளுக்கு கண்டிப்பாக சொல்லிகொடுக்க வேண்டும்,

பட்டப்படிப்பில் முதலிடத்தில் வந்த பெண்கள், வாழ்க்கை பாடத்தில் கடை நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.யாருடனும் ஒத்து போகாமல், விட்டுகுடுத்து வாழாமல்  தனது மேம்போக்கான அதிகாரத்தன்மையால், தனது வாழ்க்கையை இழக்கிறார்கள்.

இன்றைய கலக்கடத்தில் ஆண் பிள்ளைகளோ பெண் பிள்ளைகளோ, படிப்போடு மட்டுமல்லாமல், வாழ்வியல் நெறிகளை கொண்ட வாழ்க்கைக்கு தேவையான பண்புகளையும் சேர்த்து புகட்டுவோம், நாளைய சமுதாயம் படிப்போடும், பண்புகளோடும் நிறைத்த பூஞ்சோலையாக மலரட்டும்.

இப்படிக்கு

பண்பானவள்

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.