(Reading time: 5 - 9 minutes)

பொது - குழந்தைப் பேறின்மையும், அணுகுமுறைகளும் - ஜான்சி

childlessness

ன்றைக்கு நான் வாசித்த ஒரு கருத்து என்னை இந்தப் பதிவு எழுத தூண்டியது.

நான் பகிர விரும்பும் கருத்து குழந்தைப் பேறின்மை பிரச்சனைகளும் அவற்றின் அணுகுமுறைகளும்.

நமது நாட்டில் திருமணம் என்பதே குலம் தலைக்க வாரிசு ஒன்று இருக்க வேண்டும் என்பதற்காகவே, என்பதனை நாம் திருமண வீடுகளில் வாழை மரங்களை நுழை வாயிலில் வைத்து அலங்கரிப்பதில் இருந்து புரிந்து கொள்ள முடியும்.

அப்படிப்பட்ட மிக முக்கியமான வாழ்வின் அடிப்படை குழந்தைப்பேறு ஆகும். ஆனால் அனைவருக்கும் இந்த பேறு கிடைக்கின்றதா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

அப்படி எல்லோருக்கும் இந்த மாபெரும் பேறு கிடைக்காத பட்சத்தில், குழந்தைப் பேறில்லாத இந்த பிரச்சனையை எந்த முறையில் சமூகத்தில் நாம் இதை அணுகி வருகின்றோம்.என்பதை கவனிக்க நேர்ந்தால் ,

முதலாவது....முற்காலத்தில் அதாவது குழந்தை பேறின்மை இந்த பிரச்சனைக்கு ஆணும் கூட காரணியாக இருக்கலாம் என்று சிந்திக்கவும் விருப்பப்படாத, மூடத்தனமான, ஆண் சார்பு சிந்தனை கொண்ட, முற்கால சமூகத்தில் பொத்தாம் பொதுவாக பெண்ணே குழந்தை பேரின்மைக்கு காரணியாக கருதப்பட்டார்.

அதற்கு பிராயச்சித்தமாக, அவள் தன் கணவனுக்கு இரண்டாவது திருமணம் செய்வித்து, அவள் மூலமாக கணவனுக்கு குழந்தைப்பேறு உண்டாகும் படி செய்வதும், அவர்களுக்கு சேவை செய்து உரிய தியாகங்கள் பல புரிந்து ,தியாகியாகவே வாழ்வதும் எதிர்பார்க்கப் பட்டது.

ஒருவேளை அந்தக் கணவன் தன் மனைவி தனக்கு செய்விக்க விரும்பும் இரண்டாவது திருமண முயற்சிக்கு சம்மதிக்காவிட்டால் அவனை பெரிய தியாகியாக பாவிப்பதும் அப்போது இருந்தது.

மற்றொரு கோணத்தில், ஒருவேளை அந்த மனைவிக்கு தன் கணவனுக்கு இரண்டாம் திருமணம் செய்விக்கும் பெரிய மனது இல்லாவிடினும், அவனது குடும்பத்தினர் நிச்சயமாய்.... அவனுக்கு இரண்டாம் திருமணம் செய்வித்து வைப்பார்கள்.

தனது கணவனை இன்னொரு பெண்ணுக்கு உரிமையாக்கி, தான் அந்த வீட்டில் ஒரு கீழ்நிலையில் வேலைக்காரியாக வாழ்ந்து முடிவது அவள் தலை விதியாக இருக்கும். ஏனென்றால், திருமணம் செய்வதாலேயே அவளுக்கு கணவனோடு உரிமையாய் வாழ்நாள் முழுவதும் உரிமை கிடைத்து விடுவதில்லை.

கூடுதல் தேவையாக குழந்தைப் பேறு இருந்தால் தான், அவள் வாழ்வில் கணவனுக்கு கியாரண்டி, வாரண்டி எல்லாம் கிடைக்கும்.இல்லையென்றால் அவள் வெறும் குப்பைதான்.

இந்த ஓரவஞ்சனையான முதல் அணுகுமுறையில் ஏராளமான உளவியல், சொத்துப் பிரச்சனைகள் என பலவித குழப்பங்கள் உண்டு.

சில நேரம் 3 திருமணம் செய்தும் ஆணுக்கு பிள்ளைப் பேறு இருக்காது. சில நேரம் இரண்டாவது திருமணத்திற்கு பின் முதல் மனைவி கருவுற்று விடுவார் எக்ஸெட்ராஸ்...( இன்னும் எத்தனையோ scenarios)

இதன் அடிப்படை சம்பாத்தியம், சொத்து உரிமைகள் ஆணிடமே இருந்து வந்தன. பெண்ணுக்கு எந்த வித உரிமையும் இல்லை. சாப்பாட்டு போட்டால் போதும் என்று பெண்களை தியாகியாக்கி பார்த்த சமூகத்தின் அணுகுமுறை அது.

இரண்டாவது அணுகுமுறை இப்போதெல்லாம் குழந்தை பிறப்பிற்கு தடையாக இருப்பது யாருடைய உடல் நிலை என்று மருத்துவ முறை தெளிவாக வெளிப்படுத்தி விடுவதால் எவர் ஒருவருக்கு பாதிப்பு உள்ளதோ அவரை மற்றவர் அந்த காரணம் சொல்லி திருமண விலக்கு சட்டரீதியாக பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கொடுக்கப் பட்டு உள்ளது.

இவ்வாறு திருமண முறிவுகள் நிகழ்ந்த பிரபலங்கள் நாம் அறிந்துள்ளோம். இது ஒருவகையில் சில மனக் காயங்கள்

உண்டாக்கினாலும், அந்தப் பிரிவின் காரணமாக முற்றிலுமாய் ஒருவர் மற்றவரின் தொடர்புக்கு அப்பால் செல்வதால் அந்த அடிமைத்தனம், தாழ் நிலை இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். சரியா சரியில்லையா? என்பது அவரவர் மன நிலை பொருத்ததே.

இப்போது தற்காலத்து மூன்றாம் அணுகுமுறையை காண்போம். முன்பை போல குல வாரிசு, குடும்ப வாரிசு, சந்ததி என்று பெரும்பாலும் அதீத ஈடுபாடு காட்டாத நிலை நம் நாட்டில் ( குறிப்பாக பெரு நகரங்களில்) வந்து கொண்டிருப்பதால், கூடுதலாக நல்ல உடல் நிலை கொண்டவர்கள் கூட குழந்தை வேண்டாம் என்று முடிவெடுக்கும் நிலை இப்போதெல்லாம் வந்துவிட்டதை காண முடிகின்றது.அவசர வாழ்வின் கோலங்களுள் இவையும் ஒன்று.

இதனாலோ, அல்லது முற்போக்காக மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்களோ என்னவோ? அதனால்....

இப்போதெல்லாம் குழந்தைபேறு இல்லாத போதும், ஊர் மக்கள் சொந்தக்காரர்கள் எவ்வளவாய் தூற்றினாலும் கணவன் மனைவி ஒன்றுச் சேர்ந்து பலவித மருத்துவ வகைகளில் தீர்வு காணத்தான் முயல்கின்றார்கள்.

முடியாத பட்சத்தில் குழந்தையின்மை பரவாயில்லை என்று ஏற்றுக் கொண்டோ, அல்லது தத்துக் குழந்தை எடுத்து வளர்த்தோ தம் ஆசையை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

பல்வேறு தம்பதியினர் இரண்டாம் திருமணத்தையோ, விவாகரத்தையோ நாடாததை பெருமளவில் காண முடிகின்றது. ( நான் என் பார்வையில் கூறிக் கொண்டு இருக்கிறேன் நட்புக்களே)

இது ஒரு நல்ல மாற்றமே திருமணம் என்பது இரு நபர்கள் ஒன்றாய் வாழ்வில் சேர்ந்து பயணிப்பது. இருவர் பயணிக்கையில் குறை நிறைகள் இருப்பது சகஜமே. அதனை எத்தனை பெரிதாய் எடுத்துக் கொள்கின்றார்கள்? என்பதும் அதனை எத்தனை சிறியதாய் என்னை அணுகுகின்றார்கள்?என்பதும் அவரவர் சிந்தனையைப் பொறுத்ததே.

நான் பெரும்பாலும் (99.99%) மூன்றாவது அணுகுமுறை கொண்ட தம்பதிகளையே கண்டு வருகின்றேன்.

நீங்கள் உங்கள் சுற்றுப் புறத்தில் எந்த அணுகுமுறை உள்ளது என்பதை கூறினால் நானும் தெரிந்துக் கொள்வேன்.

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.