(Reading time: 4 - 8 minutes)

2019 புத்தாண்டு சிறப்பு 'பிந்து வினோத் சீக்ரட் ஃபார்முலா' - பிந்து வினோத்

happyBindu

ஹாய் பிரென்ட்ஸ்,

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

புத்தாண்டு செய்தி என்றாலே இனிய புத்தாண்டு, அருமையான புத்தாண்டு இத்தியாதி, இத்தியாதி சொல்வது தான் வழக்கம்.

நான் கொஞ்சம் வித்தியாசமாக முயற்சி செய்ய போகிறேன் 😎😎😎

 

இந்த புத்தாண்டில் நம் வாழ்வை மகிழ்ச்சியானதாக ஆக்க கூடிய ஐந்து சிம்பிள் பார்முலா பற்றி சொல்ல போகிறேன் 🤔🤔

 

இது 2018ல் நான் கண்டுபிடித்து, பின் பற்றிய பார்முலா 💖💖

 

2018 ஆண்டு எனக்கு எழுத்தாளாராக எப்படி இருந்தது என்று கேட்டீர்கள் என்றால் good - bad – ugly – good என்று சொல்வேன் 🤐🤐

Good ஆக ஆரம்பித்து, bad ஆகி, பின் ugly ஆக கீழிறங்கி போய், அதன் பின் ஜெட் வேகத்தில் good ஆக மீண்டு வந்திருக்கிறது!!!! 😂🤣

இப்போது ஒரு எழுத்தாளராக என் மனதில் அமைதி நிலவுகிறது. சந்தோஷமான மனநிலை நிலவுகிறது.

அது எப்படி என் மனம் bad - அதுவும் ‘ugly bad’ நிலையில் இருந்து இப்படி மீண்டு வந்தது என்று கேட்டீர்கள் என்றால் இந்த சிம்பிள் 5 பார்முலாவை தான் சொல்வேன்.

 

1. கஷ்டம் / பிரச்சனை என்று ஒன்று வந்தால், அதற்கு தீர்வு காண முயற்சி செய்யுங்கள்! [ When there is a problem look for a solution]

Frozen எனும் ஆங்கில படத்தில் வரும் ‘Let it go’ எனும் பாடலை கேட்டிருக்கிறீர்களா?

அதில் வரும் இரு வரிகள்,

It's funny how some distance makes everything seem small

And the fears that once controlled me can't get to me at all

இது தாங்க சீக்ரட் ஆஃப் யுவர் எனர்ஜி!!!! 😎😎

எவ்வளவு பெரிய பிரச்சனை என்றாலும் ஏதாவது ஒரு தீர்வு இருக்கும்!!!! அதை கண்டுபிடிக்க பிரச்சனைகளை தள்ளி வைத்து பார்க்க பழகுங்கள்!

இதை மட்டும் செய்தால், தமிழ் படங்களில் சொல்வார்களே ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்கும்’ மனநிலைக்கு வந்து விடுவீர்கள். 👍

 

2. அவ்வப்போது உங்கள் வாழ்வின் நிகழ்வுகளை திரும்பி பார்த்து ஆய்வு செய்யுங்கள் [ Analyze ]

ந்தோஷமாக இருந்தாலும் சரி, வருத்தமாக இருந்தாலும் சரி, கஷ்டங்களுடன் இருந்தாலும் சரி, ஒரு சில மணித்துளிகள் உங்கள் வாழ்க்கையை pause செய்து, திரும்பி பாருங்கள்.

நீங்கள் விரும்பியதை தான் செய்துக் கொண்டிருக்கிறீர்களா, யாரையாவது தெரிந்தோ தெரியமாலோ காயப் படுத்தினீர்களா, உங்களுக்கு உதவியவர்கள் யார், யார்? உங்களின் இன்றைய மகிழ்ச்சி / வருத்தம் / கஷ்டம் இதற்கு காரணம் யார், யார்?

இப்படி பல, பல கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள்!

இந்த analyze முறையை சும்மா ஜாலியாகவாவது முயற்சி செய்து பாருங்கள், பலன்களை கண்டு ஆச்சர்யப் பட்டு போவீர்கள்! Trust Me 👍

 

3. மனதை காயப் படுத்தியவரை(களை) மன்னிக்க முயலுங்கள் [ Forgive people who hurt you ]

தை செய்வது ஈசி இல்லை. ஆனால் முயற்சி செய்தால் எந்த அளவிற்கு உங்களின் மனம் லேசாகி போகிறது என்பதை உணர்ந்து ஆச்சர்யப் பட்டு போவீர்கள்!

காழ்ப்புணர்ச்சி (grudges) வைக்காமல் இருக்க தான் சொல்கிறேன், உங்களின் கசப்பான அனுபவம் கொடுத்த பாடத்தை மறக்க சொல்லவில்லை!

எல்லோரும் நம்மை போல நல்லவராக இருக்க மாட்டார்கள் என்பதை உணருங்கள்.

அமெரிக்க முன்னால் அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா சொன்னது போல ‘When they go low, we go high’ என அவர்களை மன்னித்து, உங்களை உயர்வான நிலையை நோக்கி கொண்டு செல்லுங்கள். 👍

 

4. நன்றி & மன்னிப்பை உங்களின் மனதில் இருந்து சொல்லுங்கள் [ Say thanks and sorry from your heart ]

ங்களின் வாழ்க்கையை ஆய்வு (analyse) செய்தால் எத்தனை பேர் எத்தனை விதங்களில் உங்களுக்கு உண்மையாகவே உதவி இருக்கிறார்கள், எத்தனை பேரை தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் காயப் படுத்தி இருக்கிறீர்கள் என்பது தெளிவாக தெரியும்.

அவர்களிடம் உங்கள் நன்றி (அ) மன்னிப்பை எந்த வித ஈகோவும் இல்லாமல் இறங்கி வந்து சொல்லுங்கள் (அ) கேளுங்கள். இந்த நன்றியையும், மன்னிப்பையும் மனமார சொல்லுங்கள்! 👍

 

5. இது ‘survival of fittest’ யுகம் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்! [ Survival of fittest ]

நான் மேலே சொன்னது போல நம்மை சுற்றி இருக்கும் எல்லோரும் நமக்கு உதவுபவர்கள் & நல்லவர்கள் இல்லை!

நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ இது ‘survival of fittest’ யுகம்.

Chess விளையாட்டை போல எப்போது / எப்படி ஒருவரை அடித்து வெற்றி பெறலாம் என்று யோசிப்பவர்கள் ஏராளம். விழிப்புடன் இருக்க வேண்டியது நம் கடமை!👍

 

ப்படியே விழ நேர்ந்தாலும், எழுந்து, நாம் நம் பயணத்தை தொடராலாம்!

ஏனென்றால் நமக்கு எல்லாம் தான் இப்போது இந்த சீக்ரட் Bindu Vinod பார்முலா தெரியுமே 😎😎

 

2019ல் என்னுடைய சீக்ரட் பார்முலாவை கட்டாயம் முயற்சி செய்து பாருங்கள் பிரென்ட்ஸ்.

உங்களுக்கும் நம் kung-fu panda ஸ்டைலில் ‘inner peace’ தேடி வரும் 😎😎

 

ந்த புத்தாண்டு உங்களுக்கு எல்லா விதத்திலும் சிறந்த ஆண்டாக அமைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் – Coming STRAIGHT FROM my HEART.

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.