(Reading time: 2 - 3 minutes)

பொது - சித்திரம் பேசுதடி - 05 - நம்பிக்கை, அவநம்பிக்கை - ப்ரீத்தி R

kids 

ன்றைய மாணவர்கள் அவநம்பிக்கை நிறைத்தவர்களாக இருக்கின்றனர், நமது வாழ்க்கையின் அடிப்படையே நம்பிக்கை தான், எந்த ஒரு செயலையும் செய்யும்போது நம்பிக்கையோடு, நேர்மையான வழியில், முழு முயற்ச்சியோடு செய்தல் வெற்றி நிச்சயம் என்பதை இன்றைய குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும், வீட்டிலும் சரி, பள்ளிகளிலும் சரி, நல்ல நம்பிக்கையோடு செய்யும் எந்த ஒரு செயலும் வெற்றி பெரும் என்று தெள்ள தெளிவாக மனதில் பதியும் படி சொல்லிக்கொடுக்க வேண்டும், பல மாணவர்கள் நம்பிக்கை இல்லாததால், தேர்வில் தோல்வியடைந்தால்

 உடனே தற்கொலைக்கு முயல்கிறார்கள், எவ்வளவு ஒரு முட்டாள் தனமான முடிவு, விலைமதிப்பற்ற உயிரியை அவநம்பிக்கையால் இழக்கிறார்கள். தோல்விதான் வெற்றியின் முதல் படி என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்ல வேண்டும், உன்மீது நம்பிக்கை இல்லை என்றல் கடவுளே நேரில் வந்தாலும் எந்த பயனும் இல்லை. முடியும் என்று நம்பிகையோடு முயன்று பார், முக்காலத்தையும் உணரும் பலம் கிடைக்கும். நம்பிக்கை ஒவ்வொரு உயிரின் ஆணிவேர், நம்பிக்கை உன்னை வெற்றியாளனாகும், அவநம்பிக்கை உன்னை நோயாளியாகும். எனவே குழந்தை பருவத்திலிருத்ததே நம்பிக்கையோடு வாழ்தல் வேண்டும் என்று சொல்லித்தரவேண்டும்.

நாளைய இளைய சமுதாயம் வெற்றியாளனாக திகழும் என்ற நம்பிக்கையோடு.

நம்பகமானவள்

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.