(Reading time: 4 - 8 minutes)

பொது - உண்மையான நான்! - ரவை

பொதுவாக, நாம் சொற்களை பேசும்போதோ அல்லது சிந்தனையிலோ, அவை எதைக் குறிக்கின்றன என்று தெரிந்துள்ளதாக நம்புகிறோம்! உண்மையில், நாம் அறியவில்லை!

 ஏனெனில், மனிதன், பறவை, மிருகம், மரம், கல் எல்லாமே ஆழமான பொருள் கொண்டவை; அவற்றை எந்தச் சொல்லாலும் முழுமையாக தெரிவிக்க முடியாது.

 நமக்கு தெரிந்ததெல்லாம், மேலெழுந்தவாரியான புரிதலே!

 அடிப்படையில், ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்பு உடையவை என்பது மட்டுமல்ல, எல்லாமே ஒரே இடத்தில் தோன்றியவை!

 ஒரு பறவை, ஒரு மரம், எதுவாயினும் நீங்கள் தெளிவாகவும் ஆழமாகவும் சிந்தித்தால், அவை மாபெரும் சக்தியிலிருந்து பிறந்தவை என்பதைக் காட்டும்.

 சொற்களால் எதையும் அடையாளம் காட்டாமல், பொருள்களின்மீது சிந்தனையற்ற பார்வையை செலுத்துங்கள்!

 மனிதன் சிந்தனையை பயன்படுத்துவதற்கு பதிலாக, சிந்தனைகளால் ஆளப்படுகிறான். அப்படியில்லாமல், சிந்தனையற்ற பார்வையின் மூலம் நாம் எல்லாமே ஒரே மூலத்திலிருந்து வந்தவை, ஒன்றுக்கொன்று தொடர்புடையவை எனப் புரிந்துகொண்டால், பொருட்களின் புத்தம் புதுமையும் அழகும் விளங்கும்.

 இதற்கு, நாம் நம்மை 'தான்' எனும், 'இருக்கிறோம்' எனும், உணர்வுகளிலிருந்து பிரிந்து வெளிவரவேண்டும். எப்படி செய்வது அதை?

 சொற்களை பயன்படுத்த வேண்டியதுதான், ஆனால் அதற்காக அவைகளுக்கு அடிமையாகி விடக்கூடாது.

 மகிழ்ச்சி, அன்பு, புதிது படைக்கும் திறன், எல்லாமே, நமது பார்வைக்கும் அவைகளைப் பற்றிய புரிதலுக்கும் இடையே உள்ள சிறிய இடைவெளியில் மறைந்துள்ளது!

 'நான்'

உபயோகித்தலைப் பொறுத்து, 'நான்' தவறாகவோ, சரியாகவோ பயன்படுத்தப்படுகிறது.

 வழக்குச் சொல்லாக 'நான்', 'தான்' ஆகப் பயன்படுகிறது. அது உடலையும் மனதையும் எண்ணங்களையும் சுட்டுகிறது. உண்மையில் 'நான்' அவையல்ல;

 இந்த தவறை உணர்ந்துவிட்டால், அந்தக் கணமே தவறு நீக்கப்பட்டு மெய் உணரப்படும்.

 என் வீடு, என் உறவு, என் செல்வம் என எல்லாவற்றிலும் 'எனது' சேரும்போது, நம்மை அறியாமை விழுங்கி இருளில் தள்ளி, உண்மையிலிருந்து பிரித்துவிடுகிறது.

 பரிதாபம் என்னவெனில், நாம் பிரும்மாண்டத்தின் ஒரு பகுதியாகவும், பிரும்மாண்டமாகவே இருக்கும்போது, சிறுபிள்ளைத் தனமாக, சின்னச் சின்ன பொருட்களோடும், எண்ணங்களோடும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.