(Reading time: 11 - 21 minutes)

நம்பகத்தன்மையும், வியாபாரத்தில் அதன் மகத்துவத்துவமும் - முஷ்தாக் அஹ்மத்

Trust

தேடிச்சோறு நிதம் தின்று,  பல சின்னஞ்சிறு கதைகள் பேசி

மனம் வாடி துன்பம் மிக உழன்று, பிறர் வாட பல செயல்கள் செய்து

நரைகூடிக் கிழப் பருவம் எய்தி, கொடும் கூற்றுக்கு இரையானபின் மாயும்

பல வேடிக்கை மனிதரைப்போலே,

நான் வீழ்வேன் என்றே நினைத்தாயோ?

- மஹாகவி

1995 ஆம் ஆண்டு, ஜூலை மாதத்தின்  வெயில் என் உடலை சுட்டெறிக்க ப்லாட்பார ஓர நிழலில் விறுவிறுவென நான் நடக்க, தோலின் கீழடுக்கிலிருந்து வேர்வைத்துளிகள் அலையாய் எழும்பி என் சூடான சரீரத்தை சமநிலை கொண்ட வர முயற்சிக்கும் போது, அந்த சனிக்கிழமை காலையின் இலக்கான ‘ஒன்பது மணிக்குள் ஆஃபிஸ்’ அடைந்தேன்.

45° டிகிறி வெயிலோடு சேர்நது 70% ஈரப்பதம் என் முக்கையும் முக்தையும் பிரகாசிக்க வைக்க, “குட் மார்னிங் லின்” என்று பெண் வரவேற்பாளரை வாழ்த்தியபடி ஆஃபிஸுக்குள் நுழைந்தேன்,

காலை நேர ஆஃபீஸ் கடமைகளான  ஃபாக்ஸ் மற்றும் தபாலை சரி பார்த்த பின் 'ஆர்டர் ப்ராஸஸிங்'காக வாடிக்கையாளர்களிடத்திலிருந்து வந்த 'பர்சேஸ் ஆர்டர்களை' சரி பார்த்து பண்டகசாலையில் சமர்ப்பித்ததேன்.  ஈமெயில் அப்போது தான் அறிமுகப்படுத்தப்பட்டது.  பல பேர் 'யுடோரா' என்றால் ஏதோ பரோடாவின் புது வகை என நினைத்தார்கள். பக்கம் பக்கமாக ஆவணங்கள் ஃபாக்ஸ் மூலம் அனுப்வதற்காக பல நேரம்  காத்திராமல் சில நொடிகளில் சொற்ப செலவில் உலகின் வெவ்வேறு மூலைகளுக்கு அனுப்பலாம் என்பது பலருக்கு புதிரான புதிதான சமாச்சாரம்.

டெலிபோன் ஒலி கம்ப்யுடரிலிருந்து கவனத்தை திருப்பியது. ரிஷெப்ஷனிஸ்ட் அழைத்தாள்.

'ஸார், யாரோ ஜிம் மானஜரை பார்க்கணும் கறார்.’  என்றாள் கீச்சு குரல் லின்.

‘அப்போ மானேஜர் மோஹன் கிட்ட சொல்லு.’

‘நோ ஸார். அவர் கலெக்ஷன் போய் இருக்கிறார்.’

‘ஜிம் லண்டன்லிருந்து வந்துருக்காராம், புது ப்ராடக்ட்ஸ் காட்டணுமாம்’

 ‘புது ப்ராடக்ட்ஸா?’  கொஞ்ச நேரம் யோசித்தேன்.  ஆப்டிகல் பொருட்களாக இருக்குமோ?  நாங்கள் ஆப்டிகல் விநியோகம் செய்தோம்.

‘சரி, வர்றேன்' 

ரிசெப்ஷனில் புதிதாக வாகப்பட்ட பச்சை நிர சோபாவில் அந்த லண்டன்காரர் அமர்ந்திருந்தார்.

'ஹை ! குட் மார்னிங்க் .  ஐ ஆம் முஷ்டாக். ஹெளவ் மே ஐ ஹெல்ப் யூ'.  கை குலுக்கினேன்.

‘குட் மார்னிங்க் , முஷ்டாக்.  ஐ ஆம் ஜிம் வாக்கர்.  நான் உங்க கீட்ட கொஞ்சம் பேசலாமா.’ ஆறடி உயரம், வெள்ளை தோல், பச்சை கண்கள், ஜிம்முக்கு.

‘நிச்சயம் பேசலாம், சொல்லுங்க என்ன விசயம்.’

‘வில் கம் ஸ்ட்ரெட் டு த பாண்ட்..

‘ஒரு க்ளைன்ட் கண்டெய்னர் ஃபுல்லா உடம்பு மாசாஜர் ஆர்டர் செஞ்சார். அந்த ஆர்டர் இப்ப கான்சல் ஆயிடுச்சு.’

‘ஓ’ ஆச்சிரியத்துடன் தலையாட்டினேன்.

‘இதனுடைய மார்கெட் விலை 120 திர்ஹம்.  ஆனால் உங்களுக்கு நாங்க 40 திர்ஹம் விலையில் விக்கறோம்.’

‘ஒஹ். ஆனால் இது எங்களுக்கு வேண்டாமே.’  நாங்கள் ஆப்டிகல் பொருட்கள் விநியோகம் செய்ய்பவர்கள். எங்களுக்கு எதற்கு எலக்ட்ரானிக் சாமான்.

‘உங்களுக்கில்லைனாலும் உங்க அம்மா அப்பாக்கு உதவுமே’

ஆஹா பலவீனமான நரம்பை தொட்டுடானே.  ‘நோ நோ வேண்டாம்’,  என்றேன் நானும் விட்டுக் கொடுக்காமல்.

‘இல்ல ஸார். கொஞ்சம் யோசிச்சு பாருங்க.  80 திர்ஹம்  டிஸ்கவுண்ட்.’

‘இட்ஸ் ஓகே.  வேண்டாம்.  உங்க நம்பர் கொடுங்க.  தேவைபட்டா கூப்பிடுறேன்’

இதுவரை சிரித்த முகாமாய் இருந்தவன், அய்யோ பாவம்  முகமாய் மாறினான்.  ‘இடுக்கண் வருங்கால் நகுக’  என்றேன் மனதிற்குள். வெள்ளைகாரனாவது கொம்பாவது. திடுதிப்புனு வந்து வாங்கிக்கோனா.

 ‘இட்ஸ் ஆல்ரைட் ஃப்ரெண்ட். ஐ கான் அண்டர்ஸ்டாண்ட்’ என்றான் மனதை  திடப்படுத்திக்கொண்டு.

'ஓகே பை' என்று நான் திரும்பும் தருணம் 'ஃப்ரெண்ட்' என்றான். திரும்பினேன். 'ஒருவேளை நீங்க ஹெல்ப் செய்யலாம். ' மன்றாடினான்.

புருவத்தை ஏற்றி கேள்வியை தொடுத்தேன்.

‘நான் என் வேலையை இழந்துடேன். என் கையில ஒரு பென்னி கூட இல்ல. பயங்கர கஷ்டத்தில இருக்கிறேன்.’

‘விசா  கூட புதுப்பிக்கணும். நீங்க இத வாங்கினிங்கனா எனக்கு ஒரு பீஸுக்கு 10 திர்ஹம் கிடைக்கும். ப்ளீஸ் இமாஜின் யுவர்செல்ஃப் இன் மை சிட்சுவேஷன்.’

‘ப்ளீஸ் இமாஜின் யுவர்செல்ஃப் இன் மை சிட்சுவேஷன்.’  தொட்டுவிட்டான். மந்திரச் சொற்களால் மூளையினுள் கார்டெக் ஸில் பதுங்கி கிடந்த மனித உணர்வுகளை கிளரி விட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.