(Reading time: 11 - 21 minutes)

டுத்த நாள் காலை எதிர் வீட்டு பூஜான் மசாஜ்ரை தாங்கியபடி வந்தார். 'ராசா இதை கொஞ்சம் பாரேன், சரியாய் ஓட மாட்டேங்கிது.' கையில் வாங்கி பார்த்தேன். 'ப்ச்ச்'   மசாஜ் பிலேட் செருகும் துளையில் பிசிறு ஒடிந்திருந்தது. பல முறை முயன்றும் ஒன்றும் செய்ய முடியவில்லை. 'சே! என்ன பேஜார் இது. 

'சரி பூஜான், கவலை படாதீங்க. இத ரிப்பேர் செஞ்சு நாளைக்கு கொடுக்கிறேன்.' 

' கொஞ்சம் ட்ரை பண்ணு ராசா, உனக்கு புண்ணியமா போகும். எனக்கு அடிக்கடி முதுகு வலி வரும். இத வச்சு போக்கிக்குவேன்'

அரை மணி நேரம் களைத்து சித்தியின் போன். ' அப்பா முஸ்டாகு, என்ன இது இந்த வலி மிஷின் எப்படி யூஸ் பண்றது.  போட்டா   எல்லா பிலேட்டு மே கிழ விழுது.’ கோவை சரளா கண்ணகில் கீச்சிட்டார்கள்.

சடாரென்று எழுந்து போய் அம்மாவின் மசாஜாரை திறந்து பார்த்தேன். அதே பிரச்னை. செருகு துளை உடைந்திருந்தது. ' ஆஆர்ர்ர்ர்ர்க்க்ஹ்ஹ்! போச்சு, எல்லாம் மசாஜாரும் உடைந்த பொருட்கள் தாம். ஏமாற்றப்பட்டேன். கலங்கினேன், குறுகினேன், நொந்து கொண்டேன்.

 அன்றய இரவு எனக்கு தூக்கம் வரவில்லை. எப்போது தூங்கினேன் என்று தெரியாது. ஆனால் கனவில் நிச்சயம் குதிரை பறக்கவில்லை. காலையில் எழுந்தபோதும் அதே நினைவோடுதான் எழுந்தேன். 'என்ன போய் ஏமாத்திட்டானே, படவா .  இனிமேல், இனிமேல் எவனாவது என்  வீட்டு படிக்கட்டு படி ஏறி இதுவாங்குங்க அதுவாங்குங்கனு  கேட்கட்டும்.’ சினந்தென், குமுறினேன்.

ந்த சம்பவத்தின் மூலம் நமக்கு என்ன தெரிகிறது ??

நம்பகத்தன்மை  என்பது  வியாபாரத்தின்  முதல் அஸ்திவாரம். ‘வியாபாரம் என்பது  வர்த்தக உறவுகளை   உருவாக்கும் தன்மையின் அடிப்படையில் அமைய  வேண்டும். பண்டங்களைப் பரிமாற்றும் செயற்கை தன்மை மீது அல்ல.  உறவுகளை உருவாக்குவது ஒரு பயிற்சியாகும் சாதாரண செயல்திட்டம் அல்ல' என்றார் சார்லஸ் கிறீன் என்பவர்.

ஆதலால், நம்பிக்கைத்தன்மை என்பது ஒரு பொருள் விற்பவர் மற்றும் வாங்குவரின் மத்தியில் ஏற்படும் பலமான உறவின் அடிப்படையில் உருவாகும் இறுதி விளைவாகும். இது நிச்சயமாக மனித இயல்பை சார்ந்தது. இது நீங்கள் உங்கள் வியாபாரத்தில் விற்கும் பொருட்களுக்கு அப்பாற்பட்டது, காட்சியில் வைக்கும் பிராண்டுகளுக்கு அப்பாற்பட்டது, பருவகால தள்ளுபடிக்கு அப்பாற்பட்டது.

இப்போது உங்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் உங்களின் மேல் இருக்கும் நம்பிக்கையின் காரணமாக வருகிறார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கேள்வியை நீங்களே  கேட்டு கொள்ளுங்கள்.

ரு சிறுமியும் அவளுடைய  தந்தையும் ஒரு பாலத்தை கடந்து கொண்டிருந்தார்கள்.  தந்தைக்கு கொஞ்சம் பயமாக இருந்தது.  ஆதலால் தன் மகளிடம் சொன்னார், ' செல்லம், கையை கட்டியாக பிடிச்சுக்கோ. இல்லைனா நீ ஆற்றில விழுந்துருவே.'

'இல்லேப்பா, நீங்க என் கைய பிடிச்சுக்குங்க.'  என்றாள் சிறுமி.

'அதிலென்ன வேறுபாடு', வியந்து கேட்டார்  தந்தை.

' ரொம்ப பெரிய வேறுபாடு உண்டு ',  பதிலளித்தாள் சுட்டிச் சிறுமி.   நான் உங்க கைய பிடிச்சு எனக்கு ஏதாவது ஆச்சுன்னா, நான் உங்க கைய விட சாத்தியம் உண்டு.  ஆனா நீங்க என் கைய பிடிச்சிருந்தா, என்ன ஆனாலும் சரி, நீங்க என் கைய விட மாட்டீங்க.’

ந்த உறவிலும் சரி, நம்பிக்கையின் அடித்தளம் அதன் பிணைப்பில் இல்லை அதன் பந்தத்தில் உள்ளது.

உங்களை நம்பும்  வாடிக்கையாளர்களை  கட்டியாக பிடியில் வைத்துக்கொள்ளுங்கள்.

அதற்கு மாறாக அவர்கள் உங்களை பிடியில் வைப்பார்கள் என்று கனவு காணாதீர்கள்.

என்னுடைய இருபது வருட கால வளைகுடா வாழ்க்கைல இந்த நம்பிக்கை சமாச்சாரத்தினால் பலருடைய வாழ்க்கை உருவாகியும் உள்ளது உருக்குலைந்துமுள்ளது.  ஹீரோவாக இருந்தவர்கள் ஸிரோவாக மாறிருக்கிறார்கள். சிலபேர் ஜெயிலும் போயிருக்கிறார்கள்.

அதனால், வியாபாரத்தில் நீங்கள் ஈடுபடும் போது நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையம்,  ஒவ்வொரு வாக்குறுதியும் , பண்டப் பரிமாற்றமும் தொழில் தர்மத்தோடு இருக்க வேண்டும்.

இதன் மூலம் , வாடிக்கையாளர் மனதில் அழிக்க முடியாத தடங்களை நாம்   பதிக்க வேண்டும். அதன் விளைவு, மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள். மகிழ்ச்சியான  வாடிக்கையாளர்கள் விசுவாசமான வாடிக்கையாளர்களாய் திகழ்வார்கள்.

இதை தான் உங்களை மற்றவர்களின் மத்தியில் தனிப்படுத்தி காட்டும்.

நீ என்னிடம் பொய் சொன்னதற்காக எனக்கு வருத்தம்  இல்லை.

நான் ஏன் வருந்துகிறேன் என்றால்,

இனிமேல் என்னால் உன்னை நம்ப முடியாது என்பதே - பிரெடிரிக் நீஷ்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.