இந்த செய்திகளை நீங்கள் படித்(கிர்ந்)தீர்களா? - சாந்தி
சமீபத்தில் தோழி ஒருத்தர் வாட்ஸ்-அப்பில் பகிர்ந்துக் கொண்ட தகவல் என்னை யோசிக்க வைத்தது.
என்ன தகவல்ன்னு கேட்குறீங்களா? இதோ இந்த பட செய்தி தான்!
படிச்சுட்டு சிரிக்கிறதா அழுறதான்னு தெரியலை.
இந்த செய்தி தப்புன்னு சொல்ல காலண்டர் எல்லாம் தேட வேண்டாம். ஒரு நிமிஷம் யோசிச்சாலே போதும்.
யோசிச்சு பாருங்க, லீப் இயர் தவிர எல்லா பிப்ரவரி மாசத்திலேயும் 28 நாள் தான் இருக்கும். அப்போ obviously 7 கிழமைகளும் 4 தடவை வர தான் செய்யும்!
2017ன்னு இல்லை, 2018லேயும் அப்படி தான்!
சின்ன தகவல் கூட பகிர்ந்துக் கொள்ள ஒரு வாரம் to பத்து நாள் ஆன காலம் போய் அடுத்த நேனோ செகண்ட் தெரிந்துக் கொள்ளும் வசதிகள் பேஸ்புக், வாட்ஸ்-அப், வைபர், கூகிள்+ன்னு எல்லாம் வந்திருப்பது நல்லது தான்.
ஆனால் அதை எல்லோரும் சரியா பயன்படுத்துறோமா????
நாம் பகிர்ந்துக் கொள்ளும் தகவல் சரியானது தானான்னு எத்தனை பேர் சரி பார்த்து விட்டு பகிர்ந்துக் கொள்றோம்???
சமீபத்தில் சென்னையை தாக்கிய புயல் நேரத்தில் வந்த இன்னுமொரு ஷேர் இது:
படிச்சதும் நான் கூட ஒரு நிமிஷம் ஆடி தான் போயிட்டேன்
ஆனால், நாசால அப்படி ஒரு ரிப்போர்ட் இல்லைன்னு நான் சொல்லனுமா!
இது போல புரளிகளை பரப்ப நாமும் துணை போகனுமா? யோசிங்க!
அடுத்த முறை உங்கள் நட்பு வட்டத்தில் ஃபார்வர்டட் செய்தியை பகிரும் முன் யோசித்து விட்டு பகிருங்கள். ப்ளீஸ்....!
{kunena_discuss:747}