(Reading time: 4 - 7 minutes)

ரசிகையாகிய நான்.. – 01

Rasigai

சிகர்கள்..!!! இந்த உலகத்தோட மூலை முடுக்குகளில் கூட நீங்க சந்திக்கலாம்.. இயற்க்கை இசை ஆடல் அருவி தான் செய்யுற வேலைன்னு தொடங்கி வினோதமான சில விஷயங்களை ரசிக்கிற மனிதரைகளையும் நீங்க சந்திச்சுருக்கலாம்.. அந்த கோடான கோடி பேரில் நானும் ஒருத்தி.. உங்களை போலவே ஒரு ரசிகை..

இந்த சிறுகதை தொடரை இப்போ திடீர்ன்னு தொடங்கி இருக்காளே? இவ்வளவு நாள் ஆளே  காணாமல் போயிருந்தா? இப்போ என்னன்னு நினைக்கலாம் சில பேர்.. காரணம் இருக்கு.. இந்த உலகத்தில் காரணம் இல்லாமல் நடக்கும் விஷயங்கள் இருக்கான்னு தெரியலை.. அப்படியே இருந்தாலும் மறைக்கப்பட்ட அல்லது கண்டுபிடிக்க படாத காரணங்களாக தான் இருக்கும்..

இதற்கு.. இந்த தொடருக்கு முக்கிய காரணம்.. ஒரு ஆழ்ந்த ரசிகன் ஆற்ற முடியாத சோகம்.. அதுக்காக இந்த தொடரை சோகமாக கொண்டு போவியா?-ன்னு நீங்க கேட்டா... கண்டிப்பாக இல்லை.. என் சோகத்தை மறைக்கிற ஒரு சில நல்ல விஷயங்களை பகிர்ந்துக்க இந்த முறையும் நான் தேர்ந்தெடுத்தது எழுத்து..!! ஆமா ஒரு ரசிகையாய் இருக்கிற என்னை ரசிக்க தூண்டிய முதல் விஷயம் இசை ஆனால் எழுத்தின் கை பிடித்த நாள் முதல் தான் நான் ரசிகைக்கான முழு அங்கீகாரம் பெற்றேனோன்னு நான் நினைக்கிறது உண்டு.. மனசை கட்டுக்குள்ள கொண்டு வர முடியாத அளவு சோகமும் மகிழ்ச்சியும் ஏற்படுகிற நிறைய, நிறைய... தருணங்கள்ல எழுத்து மட்டும் தான் ஒரே துணை.. என் மனதின் வெளிப்பாடு..

இப்போவும் ஒரு இழப்பு.. என் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமான விஷயம் பறிபோன துக்கம்.. முகம் கண்டிராத அந்த மனிதன் மேல நான் கொண்ட காதல் அவர் தமிழ் மேல் நான் கொண்ட பசி.. என் அழகிய பௌர்ணமி நாட்கள்..

இந்த தொடரோட முதல் சில அத்தியாயங்கள்ல நான் பேசப் போறது.. நா.முத்துக்குமார் பற்றி.. ஆமாம் அவரே தான்.. ஜீரணிக்க முடியாத சோகத்தின் வெளிப்பாடு தான் இந்த தொடரை நான் துவங்க உந்துகோலாய் அமைந்தது.. உங்களுக்கும் பிடிக்கும்ன்னு நினைக்கிறன்.. தவறு இருந்தால் மன்னியுங்கள்.. பிடித்திருந்தால் ஆதரியுங்கள்..

என் ஆனந்த யாழ் – 1

ல்லா விஷயத்துக்கும் ஒரு ஆரம்ப புள்ளி அவசியம்.. ஒரு சில நேரங்களில் அந்த ஆரம்ப புள்ளியில் முற்றுப்புள்ளியும் அமையும்.. அதே போல தான் எனக்கு நா.முத்துக்குமார்.. அவர் எழுதிய பாடல் வரிகளை தினமும் முணுமுணுக்காமல் என் உதடுகள் இருந்திருக்குமான்னு கேட்டா கண்டிப்பா இல்லைன்னு தான் சொல்வேன்..

ஆனால் தினமும் சாப்பாட்டுல சேர்த்துக்கறோம் அப்டிங்கறதுக்காக உப்பு மேல காதல் வந்திடுதா நமக்கு? இல்லையே.. அது இன்றியமையாத ஒன்று வாழ்வோடு பொருந்திய ஒன்று.. அதை யாரும் அதிக சிரத்தை எடுத்து கவனிக்கறதில்லை.. அதுக்காக அது இல்லாமையும் நாம இருக்கிறதில்லை..

இப்போ இங்க இந்த உப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கறீங்க? சொல்ல முடியுமா? முந்த நாள் சாப்பிட ஜாமுன் சுவை நாக்குல ஒட்டியிருக்கு இன்னும்... என்ன இனிப்பு என்ன சுவை தெரியுமா?-ன்னு சிலாகிக்கற நம்ம..

நேத்து சாப்பிட்ட அவியலோட உப்பு சுவை நாக்குல இன்னும் இருக்குப்பின்னு என்னைக்காவுது சொல்லி இருப்போமான்னு கேட்டா இல்லை..!!!

ஆனால் ஒரு வேலை உப்பில்லாம சாப்பிட சொன்னா மட்டும் முகம் சுளிப்போம்..

இதே போல அமைந்தது தான் நா.முத்துக்குமார் உடைய பாடல் வரிகள் என் வாழ்வில்.. அவருடைய திரையுலக ஆரம்ப காலங்கள் என் பள்ளி பருவம்.. அப்போ இந்த அளவுக்கு டெக்னாலஜி வளரலை அதுவும் இல்லாம நல்ல படிச்சா மட்டும் தான் நீ நல்ல பிள்ளைன்னு சொல்லி சொல்லி வளர்க்கப்பட்ட ஒரு பொண்ணு நான்..

ஆனாலும் அந்த இனம் புரிய வயசுலே எனக்குள் இந்த ரசிகை பிறந்திட்ட.. அவள் வளரும் போது கை பிடித்து கூடி வந்தவங்கள்ல ஒரு முக்கிய பங்கு முத்துவுடையது..

"நினைத்து நினைத்து பார்த்தேன்" பாட்டின் அர்த்தம் புரியலைனாலும் அதோட தாக்கம் முழுசா உணரலை என்றாலும் அதை ஆயிரம் முறைக்கு மேல நான் அந்த வயசிலேயே பாடியிருக்கேன்!!

அப்படி நா.முத்துக்குமார் என் வாழ்வின் அங்கமாகி போனாலும் உணராமலே இருந்த எனக்கு அவரோட அருமையை உணர வெச்ச ஒரு தருணம் அல்லது ஒரு வழி எது தெரியுமா??!! அடுத்த அத்தியாயத்தில் சொல்றேன்..

ரசனைகள் தொடரும்

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.