(Reading time: 6 - 11 minutes)

ஆன்மீகக் கட்டுரை - தனிநபர் சுதந்திரம் - ரவை

Spiritual tips

ந்தியா என்கிற பாரதம் சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன.

அதாவது, அரசியல் ரீதியாக, பிரிட்டீஷாரிடமிருந்து விடுதலை பெற்று, மக்களாட்சிமுறையில் வாழ்கிறோம்.

ஆனால், இன்னமும் சமுதாய ரீதியில் சாதி, மத, இன பாகுபாடுகளிலிருந்து முழுவதும் விடுதலை பெறவில்லை!

அதுபோலவே, பொருளாதார ரீதியிலும், விடுதலை பெறவில்லை. ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. ஒருசில பணக்கார முதலாளிகளிடம் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்து கிடக்கிறது.

சமீபகாலமாக, தனிநபர் சுதந்திரமும் பறிபோய்விட்டது. எங்கும், எதிலும் தணிக்கை!

இத்தனை பிரச்னைகளுக்கிடையிலே வாழ்கிற நமக்கு, இவை போதாது என்பதுபோல், நமக்கு நாமே விலங்கிட்டுக்கொண்டு தவிக்கும் மூடத்தனத்தைப் பற்றி சற்று சிந்திப்போமா?

" மனிதன் சுதந்திரமாகப் பிறந்தும், அவன் எங்கும் கட்டுண்டு கிடக்கிறான்"

என பிரெஞ்ச் மேதை ஒருவன் சொன்னான். அது, நம் ஒவ்வொருவருக்கும் பொருந்தும்!

நமது ஆசைகள், பற்றுதல்கள், காம, குரோதங்கள், பேராசைகள், அகம்பாவம், இன்னும் எத்தனையோ! இவைகளுக்கு அடிமையாகி நாம் கட்டுண்டு கிடக்கிறோம்.

காபி, டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்களால், ஒருவேளைகூட அது இல்லாமல் இருக்கமுடியாது. அந்தப் பழக்கத்துக்கு நாம் அடிமை!

நம் கோபத்துக்கும், ஆத்திரத்துக்கும், உணர்ச்சிகளுக்கும் நாம் அடிமை.

பேராசை, ஆசை, சோகம், சுகம், பாசம், பந்தம், உடைமைக்கு நாம் அடிமை.

ஏன்? நம் மனதுக்கும், உடலுக்கும் அடிமைப்பட்டு அவை ஆட்டுவிப்பதற்கு இரையாகிவிட்டோம்.

அதனால், நமக்கு ஒருநாளும் அமைதியோ, நிரந்தர மகிழ்ச்சியோ, கிடைத்ததில்லை.

என் உடல், என் மனம், என் அறிவு, என் பெயர், என்று பேசும்போது, அழகாகவும், தெளிவாகவும் அவை வேறு, அவை நாமல்ல, நாம் அவை எதுவுமேயில்லை, அவைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று அழுத்தமாக தெரிவிக்கிறோம்.

நம் உயிர் போன மறுகணமே, நம்மை பிறர், நம் பெயர் சொல்லி குறிப்பிடுவதில்லை, 'பாடி' 'உடல்' என்றுதான் சொல்கிறார்கள்.

எல்லோருக்கும் உண்மை தெரிந்திருக்கிறது. ஆனாலும், மறந்துவிடுகிறோம். 

மறதியின் விளைவாக, எல்லா உணர்வுகளுக்கும் பலியாகி நிம்மதி இழந்து தவிக்கிறோம்.

யுகயுகமாக, ஞானிகள் இந்த உண்மைகளை தெளிவாகவும், கதைகள் மூலமும் பேசியும் எழுதியும் வைத்தும்கூட, நாம் தொடர்ந்து அடிமைப்பட்டுக் கிடக்கிறோம்.

இவைகளை நான் உங்களுக்காக விளக்கவில்லை. எனக்காக சொல்லிக்கொள்கிறேன்.

இதை தவிர்க்க, என்ன செய்யலாம் என்று யோசித்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்:

நடைமுறையில், எளிமையாக செய்யக்கூடியவைகளை பார்ப்போம்:

1.பிறர் நம்மிடம் பேசினாலோ, ஏசினாலோ, உடனடியாக அதற்கு நாம் பாதிக்கப்பட்டு, சிந்திக்காமல், உடனடியாக பதில் சொல்லியாகவே தீரவேண்டும் என யாரோ கட்டாயப்படுத்துவதுபோல, அவசரப்பட்டு, மனதில் அந்தக் கணம் தோன்றியதை பேசவோ, ஏசவோ, கூடாது. பொறுமையாக கேட்டுக்கொள்வோம். பிறர் சொல்வதெல்லாம் உண்மையென்றும் அவை நம்மை பாதிக்கும் என்றோ அஞ்சவேண்டாம். 

உண்மையாயிருந்தால், அதற்குரிய பதிலை யோசித்து பொருத்தமான நேரத்தில் கூறலாம். இதன்மூலமாக, மன உளைச்சலை தவிர்க்கலாம்.

2.ணம், சொத்து, உடைமை யாவுமே நம்மிடம் கடவுள் சில காலத்துக்கு ஒப்படைத்திருக்கிறான், எப்படி அவற்றை நம்மிடம் ஒப்படைத்தானோ, அப்படி அதை நம்மிடமிருந்து எடுத்து வேறொருவருக்கு வழங்கவும் செய்வான். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், மனதில் கொஞ்சங்கூட வருத்தமின்றி, எதையோ இழக்கிறோம் என்ற துயரமின்றி, சிரித்துக்கொண்டே செயல்படவேண்டும். மனமார கொடுக்கவேண்டும். பிறருக்கு கொடுக்கிற வாய்ப்பை தந்த இறைவனுக்கு நன்றி கூறவேண்டும்.

3.ப்பொழுதும் நிகழ்காலத்தில் வாழவேண்டும். கடந்ததை நினைத்து வருந்துவதையோ, வருங்காலத்தைப்பற்றி மனக்கோட்டை கட்டுவதையோ, தவிர்க்கவேண்டும்.

ஏனெனில், கடந்த கால நினைவுகள் நம் இன்றைய சிந்தனையை பாதிக்கும். அதைப்போலவே, இன்று செய்கிற ஒரு காரியத்துக்கு எதிர்காலத்தில் இன்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று நம்பிக்கைகளை, எதிர்பார்ப்புகளை, வளர்த்துக்கொண்டால், பின்னர், ஏமாற்றத்துக்கும், கோபத்துக்கும், சோகத்துக்கும், இரையாவோம்.

4.டைக்கப்பட்ட கோடானுகோடி ஜீவராசிகளில் நாமும் ஒருவர். படைத்தவன், படைக்கப்பட்ட அனைவருடைய பயனுக்காகவும், இயற்கையை படைத்து வயிறார உண்ணவும், இருக்க வசதியும் உடுக்க உடையும் தந்திருக்கிறான். உலகத்திலுள்ள எல்லா பொருட்களும் எல்லோருக்கும் சம மாக சொந்தமானது, எவரும் பசியால் வாடக்கூடாது, நிற்க நிழலின்றி வருந்தக்கூடாது, வெயிலுக்கும் குளிருக்கும் பாதுகாப்பாக யாவருக்கும் உடை தேவை என்பதை ஏற்று, சம பங்கீட்டுக்கான நமது மனமார்ந்த ஒத்துழைப்பை தரவேண்டும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.