(Reading time: 5 - 10 minutes)

சமீபத்தில் தான் கலிபோர்னியாவில் இருந்து நியூஜெர்சிக்கு வந்திருக்கிறார்களாம். இப்போது ஹைதராபாத் நோக்கி பயணம்!

அவர்களும் இரண்டு குழந்தைகளுடன் தனியே பயணம் செய்பவர்கள் தான்!

என்னை போல எத்தனை பேர் என மனதை சமாதானப்படுத்திக் கொண்டேன்.

ப்படி நூற்றுக்கணக்கானோர் காத்து இருக்க, விமானம் கிளம்பும் ஒரு மணி நேரத்திற்கு முன் விமானத்தில் ஏற அழைப்பு விடப் பட்டது.

முதலில் பர்ஸ்ட் கிளாஸ் மற்றும் சிறு குழந்தைகளுடன் இருப்பவர்கள் விமானத்தில் ஏறலாம் என்று அறிவிக்கப் பட்டது!

சின்ன குழந்தைகளுடன் பயணம் செய்யும் போது கூடுதல் பொறுப்புகள் இருந்தாலும், இந்த முதலில் ஏற வழி வகுக்கும் சலுகை ஒரு போனஸ்!

அதை பயன்படுத்தி விமானத்தில் ஏறி எங்களின் சீட்டை கண்டுபிடித்து அமர்ந்த உடனே,

“அம்மாக்கு தலைவலி பாப்பாஸ்! நான் தூங்க போறேன்! இரண்டு பேரும் என்னை தொல்லை செய்யாமல் ஒன்னு விடியோ பாருங்க, இல்லை தூங்குங்க” என்றேன்!

எந்த நேரத்தில் சொன்னேனோ, அந்த வினாடி முதலே எங்கள் சீட்டில் ஒரே களேபரம் தான்!

அந்த விமானத்தில் பயணம் செய்த பதிமூன்று மணி நேரத்தில் ஒரு நிமிடமும் தூங்க முடியவில்லை!

அக்கா – தங்கை அடி தடிக்கு பஞ்சாயத்து, குட்டி பாப்பாவின் அட்டகாசம் & செல்லம் கொஞ்சல் என முழு பயணமும் விழித்தே இருக்க வேண்டி இருந்தது!

இதை விட வேற கொடுமை எதுவும் இல்லை என்று நான் நினைத்திருக்க, ஏன் இல்லை என்ற கேள்வியுடன், விமானம் லேன்ட் ஆகும் நேரம் அடுத்த சவால் என் குட்டி பாப்பாவின் தயவில் வந்து சேர்ந்தது!

 

பயணம் தொடரும்...

Episode 01

Episode 03

 {kunena_discuss:1127}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.