(Reading time: 3 - 6 minutes)

உலகம் நம் கையில் - அலெக்ஸா எக்கோ ஷோ [Alexa echo show]

1990களுக்கும் 2௦௦௦+ வருடங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

முக்கியமாக இந்த வித்தியாசங்களுக்கு காரணம் இன்டர்நெட். இதில் நல்ல மாற்றங்களும் இருக்கிறது, வேண்டாத விஷயங்களும் இருக்கிறது. இந்த பகுதியில் நல்ல விஷயங்களை பற்றி மட்டும் பேசுவோம்.

 

Innovation எனும் புதுமையான படைப்புகள் பலவற்றை நாம் இப்போது பார்க்கிறோம். சில பொருட்களைப் பார்த்து ‘வாவ்! எப்படி இப்படி யோசிச்சாங்க’ன்னு எல்லாம் ஆச்சர்யப்பட்டிருப்போம்.

அது போல பிடித்த சில பொருட்களை இங்கே பகிர இருக்கிறேன்.

 

Internet எனும் டெக்னாலஜி பல விதமான comfort factors நமக்கு கொடுத்திருக்கிறது. இதை வைத்து பல விதமான புது innovationஸ் பற்றி நாம தெரிந்துக் கொள்ளலாம். இது எல்லாம் பெரிய பொருட்களாக இருக்க வேண்டும் என்று இல்லை. சின்ன சின்ன விஷயங்களாக கூட இருக்கலாம்.

அது போன்ற பொருட்கள் (அ) விஷயங்களை நாம பேசி பகிர்ந்துக்க போகிற ஒரு forum தான் இது.

 

ந்த முதல் எபிசோட்ல நாம பேசப் போறது அமேசானோட எக்கோ ஷோ பற்றி.

 

இது amazon உடைய அலெக்ஸா பயன்படுத்தும் ஒரு டிவைஸ்.

அலெக்ஸா என்பது வாய்ஸ் based சர்வீஸ். அதாவது நாம் டைப் அடிக்காமல், எதையும் க்ளிக் செய்யாமல், நம் வாய்மொழியாக கொடுக்கப் படும் commands வைத்து நமக்கு உதவும் ஒரு டிவைஸ்.

 

நம்மில் பலருடைய மொபைல் போனில இதே போன்ற feature வெறுப் பெயரில் இருக்கிறது.

உதாரணமாக ஆன்ட்ராயிட் போனில கூகிள் அசிஸ்டன்ட் இருக்கிறது. ஆப்பிள் சாதனங்களில் ‘சிரி’ இருக்கிறது.

 

இப்படி ஒரு எக்ஸ்ட்ரா feature என்பதை தாண்டி தனியாக ஒரு டிவைசாகவே வந்திருப்பது அமேசானின் எக்கோ டிவைசஸ்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.