(Reading time: 3 - 6 minutes)

ஸ்பீக்கர் போல வந்த echo, echo டாட் டிவைஸ், இப்போது டேப் மாதிரியான எக்கோ ஷோ’வாகவும் வந்திருக்கிறது.

இதில் நிறைய features இருக்கிறது! இது ஒரு புத்திசாலியான (smart) டிவைஸ். ஒரு பர்சனல் assistant போல நமக்கு உதவக் கூடிய ஒரு டிவைஸும் கூட.

ஐ-போனில் இருக்கும் facetime போல ஒரு எகோ டிவைஸில் இருந்து இன்னொரு எகோ டிவைஸ்க்கு கால் செய்து பேசலாம், விடியோ chat செய்யலாம். Amazon app இருந்தாலும் கூட voice / video காலிங் செய்யலாம்

இவை அனைத்தையும் விட முக்கியமானது எக்கோவின் ஸ்மார்ட் ஃபீச்சர்ஸ்!

அதாவது அலெக்ஸா துணை (support) இருக்கும் ஸ்மார்ட் லைட், ஃபேன், செக்யூரிட்டி கேமரா, போன்ற சாதனங்களை ஆன் செய்வது மற்றும் ஆஃப் செய்வது என அனைத்தையும் இந்த எக்கோ’வை பயன்படுத்தி நம் வாய் மொழி மூலமாகவே செய்யலாம்.

எக்கோ ஷோ பயன்படுத்தி இன்னும் பல காரியங்களை செய்யலாம்.

எக்கோ உடன் வரும் features தவிர புது features தேவைப்பட்டால், ‘alexa skills’ என்று googleல் தேடினால் amazon பக்கம் ஒன்று வரும்.

[இந்த skills என்பது நாம மொபைல யூஸ் செய்யும் apps போன்றது.]

அந்த amazon skills பக்கத்தில் இருந்து உங்களுக்கு பிடித்த புது features டவுன்லோட் செய்துக் கொள்ளலாம்.

 

Amazon echo போன்ற வாய்ஸ் based கருவிகள் தான் எதிர்காலத்தை ஆளப் போகுது என்பது பல அறிஞர்களின் கருத்து.

அதனால், இதைப் பற்றி தெரிந்து வைத்துக் கொள்வதும், உங்களிடம் இது போன்ற சாதனம் இருந்தால் அதை பயன்படுத்த பழகி வைப்பதும் எப்போதும் உதவும்.

 

டுத்து வேறு ஒரு புதுமையான பொருள் அல்லது விஷயத்தோட உங்களை சந்திக்கிறேன்.

பை!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.