(Reading time: 4 - 7 minutes)

உலகம் நம் கையில் - ரூபாய் 800 கம்ப்யூட்டர்!

ங்களுக்கு மிடில் ஸ்கூல், ஹை ஸ்கூல் அல்லது கல்லூரி செல்லும் குழந்தைகள் இருந்தால் உங்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய ஒரு innovative பொருளை பற்றி தான் இந்த வாரம் பார்க்கப் போகிறோம்.

இந்த innovative productன் பெயர் ராஸ்ப்பெரி பை (Raspberry Pi).  இது தான் கட்டுரை தலைப்பு சொல்லும் 800 ரூபாய்க்கான கம்ப்யூட்டர்!

500 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன் கிடைக்கும் போது 800 ரூபாய்க்கு கம்ப்யூட்டர் கிடைப்பது பெரிய விஷயமா என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்.

ஆம், இது பெரிய விஷயம் தான்.

கம்ப்யூட்டர் என்ற உடனே பெரிய புக் சைசிற்கு யோசித்தீர்கள் என்றால் தவறு. இந்த ராஸ்ப்பெரி பை ரொம்பவும் குட்டி கம்ப்யூட்டர் சின்ன கார்ட், கிட்டத்தட்ட ஒரு கிரெடிட் கார்ட் அளவில் இருப்பது தான்.

ராஸ்ப்பெரி பை பற்றி புரிந்துக் கொள்ள சின்ன குழந்தைகள் விளையாடும் ப்ளாக்ஸ் பற்றி யோசியுங்கள். வித விதமான வடிவிலான ப்ளாக்ஸ் இருக்கிறது. உங்களுக்கு வேண்டிய வடிவம் & அளவிலான ப்ளாக்கை எடுத்து உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை உருவாக்கலாம்.

அப்படி நாம் உருவாக்கும் ப்ளாக்ஸ் பொருளுக்கு தானாக வேலை செய்யும் மூளையையும், திறனையும் கொடுக்க முடிந்தால் எப்படி இருக்கும்.

அப்படி ஒரு திறனை கொடுத்து, எதை வேண்டுமென்றாலும் ஈசியாக உருவாக்க நமக்கு உதவுவது தான் இந்த ராஸ்ப்பெரி பை.

ராஸ்ப்பெரி பை வைத்து என்ன செய்ய முடியும் என்று கேட்டீர்கள் என்றால், என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம்! வானம் கூட எல்லை இல்லை!

வீடியோ கேம்ஸ், அமேசான் அலெக்ஸா, கூகிள் நெஸ்ட் போல வீட்டு ஆட்டோமேஷன், உங்களுக்கு பிடித்ததுப் போல ரோபோட், உங்களுக்கு சொந்தமான தினம் தினம் வானிலை கணிக்கும் கருவி, இந்த காலத்து ட்ரென்ட் படி ஸ்மார்ட் செடி வளர்ப்பு இன்னும் என்ன எல்லாமோ செய்யலாம்!

குறிப்பாக இந்த ராஸ்ப்பெரி பை இவ்வளவு புகழ் பெறக் காரணம் என்ன என்றால் இது பெரியவர்கள், எஞ்சினியர்கள் என்பன போன்றவர்களுக்காக கண்டுப்பிடிக்க பட்ட பொருள் இல்லை.

இதை பயன்படுத்தி மாணவர்களும் ப்ரோக்ராமிங், எஞ்சினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பாடங்களை கற்கலாம்.

மாணவர்களுக்கான சைன்ஸ் எக்ஸிபிஷன் ப்ராஜக்ட், Do It Yourself ப்ராஜெக்ட் போன்றவற்றுக்கு பாப்புலர் ட்ரெண்டாக இப்போது இருப்பது இந்த ராஸ்ப்பெரி பை

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.