(Reading time: 2 - 4 minutes)

உலகம் நம் கையில் - மூடி மேஜிக் :-)

லோ ஃபிரென்ட்ஸ்! இந்த வாரம் நாம பேசப் போறது ஒரு சிம்பிளான ஆனால் ரொம்ப எஃபேக்ட்டிவான ஒரு பொருள்.

 

இந்த பொருள் பற்றி என் அம்மாவிடம் சொன்னால் இதெல்லாம் தேவையா என்று ஒரு கேள்வி கேட்பார்கள்!

ஸோ, இது என்னைப் போல எல்லாவற்றிலும் ஷார்ட் கட் கண்டுப்பிடிக்க விரும்பும் மக்களுக்காக மட்டும் :-)

 

ண்ணெய் ஆரம்பித்து கெட்ச்-அப், தேன், சாஸ் என எத்தனையோ பொருட்கள் சின்னப் பெரிய பாட்டில்களில் வருகிறது.

 

பொதுவாக இந்த பாட்டில்களில் மூடி இருக்கும் பக்கமாக வைத்தால் அதை எடுப்பது சுலபமாக இருக்கும். ஆனால் அது என்னவோ பெரும்பாலான பொருட்கள் அந்த பக்கம் நிற்க வைக்கும் வசதியுடன் வருவதில்லை.

 

கெட்ச் அப், சாஸ் போன்றவை பாதி பாட்டிலை அடையும் போதே அதை எடுக்க தட்டுவது, தேவைக்கு அதிகமான நேரம் அதை squeeze செய்வது என்று எதை எல்லாமோ செய்ய வேண்டும். அதுவும் ஆபீஸ் ஸ்கூல் கிளம்பும் நேரத்தில் கேட்கவே வேண்டாம்!

அந்த மாதிரி டைம் – க்ரன்ச் இருக்கும் நேரத்தில் நாம் எதை எடுக்க ட்ரை செய்கிறோமோ அது வராமல் வேறு அடம் பிடிக்கும்.

 

இந்த மாதிரி இந்த பாட்டிகளுடன் மல்லுக் கட்டும் பிரச்னையை தீர்க்கும் ஒரு பொருள் தான் இது.

 

Flip-it என்ற பெயரில் நான் கண்டுப்பிடித்தது இது.

மூடியுடன் கூடவே சின்ன ஸ்டாண்ட் உடன் வருவது இது. இந்த ஸ்டாண்ட் துணையுடன் நாம் எந்த பாட்டிலையும் திருப்பி வைத்து பயன்படுத்தலாம்.

 

ஸோ, உங்களுக்கு வேண்டிய பாட்டிலில் இந்த மூடியை போட்டு மூடி வைத்தால் போதும், ப்ராப்ளம் சால்வ்ட்!

ஒரே பாக்கெட்டில் நிறைய அளவுகளில் வருகிறது. நமக்கு வேண்டிய அளவை கண்டுப்பிடித்து பயன்படுத்துவது முக்கியம்.

 

இது பாட்டிலில் இருக்கும் பொருள் கீழே கொட்டாமல் இருக்க காஸ்கெட்டுடன் வருவது தனிச் சிறப்பு!

 

என்னைப் பொறுத்த வரை ரொம்பவும் சிம்பிளான ஆனால் சிறந்தப் பயனை அளிக்கும் ஒரு புதுமையான (innovative) பொருள் இது.

 

நேரத்தை விரயமாக்காமல் உதவும் பொருளும் கூட!

    

டுத்த வாரம் இன்னுமொரு புதுமையான (innovative) பொருள் அல்லது விஷயத்துடன் உங்களை சந்திக்கிறேன்.

பை!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.