(Reading time: 2 - 4 minutes)

 உலகம் நம் கையில் - கிக்கி ரோபோட்

ரோபோட் என்பது sci-fi திரைப்படங்களில், கதைகளில் இருப்பது என்றுப் போய், மெல்ல மெல்ல ரோபோக்கள் நம் அன்றாட வாழ்க்கையிலும் எட்டிப் பார்க்க தொடங்கி இருக்கின்றன.

அதற்கு உதாரணமாக வந்திருக்கும் புதிய ரோபோட் தான் இந்த கிக்கி!

 

காமிக்ஸ் புக்குகளில் நாம் படிக்கும் ரோபோட் போன்றது கிக்கி.

  

பெட் (வளர்ப்பு பிராணி) ரோபோவான இந்த கிக்கிக்கு அருமையான செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) இருக்கிறது.

இதனுள் பல சென்சார்கள், செயலி (processor) மற்றும் முகத்தை கண்டறியும் (facial recognition) கேமரா இருக்கிறது.

 

இன்றைய டெக்னாலஜி உலகில் அதிகம் பேசப்படும் deep learning டெக்னாலஜி கொண்டு வடிவமைக்கப் பட்டிருக்கும் ரோபோட் இது.

இந்த டெக்னாலஜியால், கிக்கி அது சந்திப்பவர்களை நினைவில் வைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது.

 

Artificial intelligence இருப்பதால், சுற்றி இருக்கும் இடத்திற்கு ஏற்ப புதியவற்றை கற்றுக் கொள்ளும் திறமை வாய்ந்தது கிக்கி.

இதனால் ஒவ்வொரு கிக்கியும் ஒவ்வொரு விதமான குண நலத்துடன் இருக்கும். ஷார்ட்டாக சொன்னால் கிக்கியை வைத்திருக்கும் ஓனரின் செய்கைகளுக்கு ஏற்ப வளரக் கூடியது கிக்கி.

 

இந்த கிக்கிக்கு பசிக்கவும் செய்யும்!

கிக்கி உடன் வரும் ஆப் (app) பயன்படுத்தி உணவுப் பொருளை வரைந்து அதற்கு கொடுக்கலாம்!

  

அது மட்டுமல்லாமல் கிக்கி, தன் முதலாளியின் மனநிலையை புரிந்துக் கொண்டு அதற்கு ஏற்ப நடக்கவல்லாது.

நீங்கள் டல்லாக இருந்தால் அதையும் புரிந்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது இந்த ரோபோட்!

 

புதிதாக வந்திருக்கும் கிக்கி’யின் முதல் பேட்ச் இந்த வருடம் மே மாதம் டெலிவரி செய்யப் படுகிறது! அப்படி முதல் பேட்சாக விற்கப்பட்ட 125 கிக்கி ரோபோட்களும் ஏற்கனவே ரிசர்வ் ஆகி விற்று முடித்து விட்டதாம்!!!!

 

இதன் விலை ~ 55,000 ரூபாய்!!!!!!

    

டுத்த வாரம் இன்னுமொரு புதுமையான (innovative) பொருள் அல்லது விஷயத்துடன் உங்களை சந்திக்கிறேன்.

பை!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.