(Reading time: 3 - 5 minutes)

 உலகம் நம் கையில் - ஸ்மார்ட் டோர் பெல்

மிழ்நாடு போலீஸ் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமரா பொறுத்த சொல்லி கேட்டுக் கொண்டிருப்பது நமக்கு தெரிந்த செய்தி.

 

அப்படி பாதுகாப்பிற்காக நாம் பயன்படுத்தும் சிசிடிவி கேமராவின் லேட்டஸ்ட் வடிவமாக வந்திருப்பது இந்த ஸ்மார்ட் டோர் பெல்.

 

பொதுவாக வீட்டின் முன் இருக்கும் அழைப்பு மணி சத்தம் கேட்டால் ஜன்னல் வழியாக, அல்லது கதவின் துளை வழியாக யார் வந்திருக்கிறார்கள் என்று பார்த்து திறப்பது பலரின் வாடிக்கை. சிலர் இப்போதும் ‘யார்’ என்று கேட்டு, தெரிந்துக் கொண்டு தான் கதவை திறப்பார்கள்.

 

இப்படி நம்முடைய பழக்கத்திற்கு ‘ஸ்மார்ட்” வடிவம் கொடுப்பது தான் இந்த ஸ்மார்ட் டோர்பெல்.

 

இந்த ஸ்மார்ட் டோர்பெல்லில் கேமரா, motion சென்சர் மற்றும், wifi இருக்கிறது.

இதனுடன் வரும் appஐ நம்முடைய மொபைலில் டவுன்லோட் செய்து வைத்துக் கொண்டால், நம் வீட்டின் முன் ஏதேனும் அசைவு தெரிந்தால் உடனே நம் மொபைலுக்கு மெசேஜ் அனுப்பும்.

 

அதேப்போல யாராவது பெல் அடித்தால், யார் வந்திருப்பது என்பதை கேமரா வழியே பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.

அப்படி வந்திருப்பவர்களிடம் யார் என்ன என்று தெரிந்துக் கொள்ள app பயன்படுத்தி பேசவும் செய்யலாம்!

  

இதை எல்லாம் செய்ய நாம் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பது தான் இந்த டோர்பெல்லின் பிரத்தியேக ஃபீச்சர்.

வெளிநாடுகளில் மிகவும் பிரபலமாகி விட்ட இந்த ஸ்மார்ட் டோர்பெல் இப்போது நம் நாட்டிலும் உருவாக தொடங்கி இருக்கிறது.

கூகிள், அமேசான் போன்ற பெருநிறுவனங்கள் இதில் முதலீடு செய்திருப்பதே இதன் திறனை நமக்கு எடுத்துச் சொல்லும். அந்த நிறுவனங்களைத் தவிர விப்ரோ, ஹனிபெல் போன்ற நிறுவனங்களும் கூட ஸ்மார்ட் டோர்பெல் உற்பத்தி செய்கிறார்கள்!

 

கோத்ரேஜ் போன்ற சில நிறுவனங்கள் app, மொபைல் என்று இல்லாமல், வீட்டிற்குள்ளேயே ஸ்க்ரீன் இருக்கும் விதமான ஸ்மார்ட் டோர்பெல்லையும் உற்பத்தி செய்கிறார்கள்.

    

டுத்த வாரம் இன்னுமொரு புதுமையான (innovative) பொருள் அல்லது விஷயத்துடன் உங்களை சந்திக்கிறேன்.

பை!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.