search icon
என் மலர்tooltip icon
    • மாரியம்மன் கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறுகிறது.
    • கலவரத்தில் ஈடுபட்டதாக இருதரப்பையும் சேர்த்து 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்

    சேலம் மாவட்டத்தில் உள்ள தீவட்டிப்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலுக்குள் நுழைய ஒரு தரப்பினருக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்படவில்லை எனற பிரச்சனை கடந்த 4 ஆண்டுகளாக நீடித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

    இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இந்த கோவில் செயல்பட்டு வருவதால் அறநிலையத்துறை அதிகாரிகள் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

    இந்த மாரியம்மன் கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறுகிறது. அதனையொட்டி இந்த ஆண்டு மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் நடைபெற இருந்த நிலையில் மீண்டும் அந்த கோயிலில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வன்முறை வெடித்துள்ளது.

    இந்த மோதலில் 5 கடைகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தீவப்பட்டிப்பட்டி பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அனைத்து கடைகளும் அங்கு அடைக்கப்பட்டன.

    கலவரத்தில் ஈடுபட்டதாக இருதரப்பையும் சேர்த்து 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். காவல்துறையினர் பெண்கள் சிலரையும் தாக்கியதாக அப்பகுதியில் புகார் கூறிய பொதுமக்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த மோதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்நிலையில், கோவில் கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நபர்களை விடுவிக்க வலியுறுத்தி தீவட்டிப்பட்டி பகுதியில் பெங்களூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டு விட்டால், அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்.
    • இந்த பரிசோதனை அந்த பெண் கன்னித்தன்மையுடன் இருக்கிறாரா? என்பதை உறுதி செய்வதற்காக.

    உலகில் மர்மமான நாடு என்றால் அது வடகொரியா. அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அந்த அளவிற்கு அந்நாட்டின் அதிபரான கிம் ஜாங் உன் ஆட்சி செய்து வருகிறார். வடகொரியாவின் முக்கியமான வேலை ஏவுகணை சோதனை நடத்துவதுதான்.

    உலக நாடுகள் பொருளாதார தடைகள் விதித்த போதிலும், சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். அவரது உடல் நலம் குறித்து பல்வேறு வதந்திகள் உலா வந்தன. உயிரோடு இருக்கிறாரா? என்ற கேள்வி கூட எழுந்தன.

    கிம் ஜாங் உன் குறித்து பல்வேறு தகவல் வெளியாகுவது சகஜம்தான். ஆனால் தற்போது வடகொரியாவில் இருந்து தப்பி வெளிநாட்டிற்கு வசித்து வரும் இளம் பெண் ஒருவர், ஆங்கில பத்திரிகைக்கு அளித்துள்ளதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கிம் ஜாங் உன் தனக்காக இன்ப குழு வைத்துள்ளதாகவும், அந்த குழுவிற்கு வருடந்தோறும் 25 கன்னிப் பெண்கள் தேர்ந்தெடுத்து அனுப்பப்படுவார்கள் என்றும் அந்த பெண் கூறியதாக மிர்ரர் செய்தி வெளியிட்டுள்ளது.

    தப்பி வந்த அந்த பெண் கூறியதாக மிர்ரர் வெளியிட்டுள்ள செய்தில் கூறியிருப்பதாவது:-

    அழகான பெண் கிடைக்கவில்லை என்றால், பள்ளிக்கூடத்திற்குக் கூட சென்று ஒவ்வொரு வகுப்பறையாக சென்று பார்வையிடுவார்கள்.

    ஒரு வழியாக அவர்கள் அழகான பெண்களை கண்டுபிடித்து விட்டால், அவர்களுடைய முதல் விசயம் அவர்களுடைய குடும்பம் குறித்து விசாரிப்பதுதான். அந்த பெண்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வடகொரியாவில் இருந்து வெளியேறி இருந்தால் அல்லது சொந்தக்காரர்கள் தென்கொரியா அல்லது மற்ற நாடுகளில் வசித்து வந்தால் அவர்களை நிராகரித்து விடுவார்கள்.

    ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டு விட்டால், அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார். இந்த பரிசோதனை அந்த பெண் கன்னித்தன்மையுடன் இருக்கிறாரா? என்பதை உறுதி செய்வதற்காக. இந்த பரிசோதனையின் போது சிறிய குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டாலும், அவர்கள் தேர்வாகாமல் இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.

    இந்த கொடூரமான பரிசோதனைக்குப் பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சில பெண்கள் பியாங்யாங் அனுப்பப்படுவார்கள். அங்கு அவர்களுடைய ஒரே நோக்கம் சர்வாதிகாரியான கிம் ஜாங் உன்-ஐ மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதுதான்.

    இன்ப குழு மூன்று தனித்தனி குழுவாக பிரிக்கப்படும். ஒரு குழுவிற்கு மசாஜ் பயிற்சி அளிக்கப்படும். மற்றொரு குழு பாட்டுப் பாட வேண்டும். நடனமாட வேண்டும்.

    3-வது குரூப் சர்வாதிகாரி மற்றும் மற்ற நபர்களுடன் பாலியல் நெருக்கத்துடன் இருக்க வேண்டும். இவர்களை எப்படி மகிழ்விப்பது என்பதை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும், அதுதான் அவர்களின் ஒரே குறிக்கோள்.

    மிகவும் கவரக்கூடிய வகையிலான கவர்ச்சிகரமான பெண்கள் சர்வாதிகாரிக்கு சேவை செய்ய தேர்வு செய்யப்படுவார்கள். மற்றவர்கள் குறைந்த ரேங்க் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை திருப்பிப்படுத்த ஒதுக்கப்படுவார்கள்.

    இந்த குழுவில் உள்ள பெண்கள் சுமார் 25 வயதை தொடும்போது, அவர்களின் பணிவிடை காலம் முடிவடைந்துவிடும். அந்த பெண்களில் சிலர் தலைவர்களின் பாதுகாவலர்களை திருமணம் செய்து கொள்வது உண்டு.

    இவ்வாறு அந்த பெண் தெரிவித்துள்ளதாக மிர்ரர் தெரிவித்துள்ளது.

    • தேர்வை 24 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.
    • மாணவிகள் சானிட்டரி நாப்கின் பயன்படுத்த அனுமதி தந்திருக்க வேண்டும்.

    நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

    557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் 5.20 மணி வரை இத்தேர்வு நடக்க இருக்கிறது.

    14 வெளிநாடுகளிலும் நீட் தேர்வு நடக்கிறது. தேர்வை 24 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

    நீட் தேர்வுக்கு 3 நாட்கள் முன்னதாக தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு இணையத்தில் இன்று வெளியானது.

    இதற்கிடையே, நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு ஆடைக் கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றி வருகிறது.

    அதன்படி, முழுக்கை சட்டை, ஜீன்ஸ், துப்பட்டா உள்ளிட்ட ஆடைகள் அணியக் கூடாது. பெரிய பட்டன்களைக் கொண்ட சட்டைகளை அணியக் கூடாது.

    கால்களை மூடும் விதமான செருப்பு மற்றும் ஷூக்கள் அணியக்கூடாது. குறைவான உயரமுள்ள சாதாரண செருப்புகளையே அணிய வேண்டும்.

    நகைகள், காப்பு அணியக்கூடாது. பூக்கள், பேட்ஜ்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக் கூடாது. தலைமுடியில் பின்னல் மற்றும் கொண்டை கூடாது போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், தீ விபத்தில் சிக்கி சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்ட மாணவி டயப்பர் அணிந்து தேர்வு எழுத சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

    மனுதாரரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு கோரிக்கையை தேசிய தேர்வு முகமை ஏற்றுக் கொண்டுள்ளது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

    நீட் தேர்வுக்கான ஆடைக் கட்டுப்பாட்டில் மாணவிகள் சானிட்டரி நாப்கின் பயன்படுத்த அனுமதி தந்திருக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

    • இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
    • இந்த படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார்.

    தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் புதிய படம் குபேரா. சேகர் கம்முலா இயக்கும் இந்த படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

    இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், குபேரா படத்தில் நாகர்ஜூனாவின் ஃபர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

    கனமழை பெய்யும் இரவு நேரத்தில் கட்டுக்கட்டாக பணம் அடுக்கி வைக்கப்பட்டுள்ள லாரி அருகில் நாகர்ஜூனா குடை பிடித்து நிற்கும் காட்சிகள் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • எலெக்‌ஷன் படத்தின் முதல் 'சிங்கிள்' கடந்த மாதம் வெளியானது.
    • மன்னவன் பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    'உறியடி', 'பைட் கிளப்' உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் விஜயகுமார் தற்போது 'எலெக்ஷன்' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.

    இப்படத்தை 'சேத்துமான்' பட புகழ் இயக்குனர் தமிழ் இயக்கியுள்ளார்.

    'அயோதி' புகழ் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் புதுமுகம் ரிச்சா ஜோஷி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். 'ரீல் குட் பிலிம்ஸ்' ஆதித்யா இந்த படத்தை தயாரித்துள்ளார்.

    இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்து உள்ளார்.

    பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நேரத்தில் 'எலெக்ஷன்' என பெயர் சூட்டப்பட்டு இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.

    இந்த படத்தின் முதல் 'சிங்கிள்' கடந்த மாதம் வெளியானது. இந்நிலையில், எலெக்ஷன் படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்று வெளியாகியுள்ளது.

    மன்னவன் என்று துவங்கும் இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியலுக்கு வருவதற்கு முன்பு போலீஸ் அதிகாரியாக இருந்தார்
    • அண்மைக்காலமாக விஷால் பாஜகவுக்கு ஆதரவான கருத்துகளைப் பேசி வருகிறார்

    ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்து தயாராகியுள்ள படம் 'ரத்னம்'. இந்த படம் வெளியானதில் இருந்து கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.

    அடுத்ததாகக விஷால் துப்பறிவாளன் 2 மற்றும் முத்தையா இயக்கும் புதிய படம் ஆகியவற்றில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

    இந்நிலையில், விஷால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பயோபிக்கில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியலுக்கு வருவதற்கு முன்பு போலீஸ் அதிகாரியாக இருந்தார். எனவே, அவர் எப்படி போலீஸ் அதிகாரியாக மாறினார். அதன்பிறகு எப்படி அரசியலுக்குள் நுழைந்தார் என்பதை வாழ்க்கை வரலாற்று படத்தில் மக்களுக்கு காட்ட இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

    பாஜக சமீப காலமாக எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்து உள்ளது. தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேச்சு, செயல்பாடு மிகவும் சிறப்பாக உள்ளது. அவரது பொறுமை எனக்கு பிடித்து உள்ளது என்று விஷால் பேசியிருந்தார்.

    அதனால் பாஜகவினரான அண்ணாமலை பயோபிக்கில் விஷால் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி என்றே சொல்லப்படுகிறது.

    நடிகர் விஷால் கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் அரசியலுக்கு வருவது உறுதி மற்றவர்களை போல இப்போது வருகிறேன் அப்போது வருகிறேன் என்று சொல்லமாட்டேன். கண்டிப்பாக வரும் 2026-ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவேன் என்று கூறி இருந்தார்.

    இந்த சூழலில் அவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

    • கேஎல் ராகுல் ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வருகிறார்.
    • சாம்சன் அனைத்து ஆர்டர்களிலும் ஆடுவார்.

    இந்திய அணி தேர்வு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் ரோகித் சர்மா மற்றும் அஜித் அகார்கர் பங்கேற்று செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கேஎல் ராகுல் இடம்பெறாறது குறித்து அஜித் அகார்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

    அதில், கேஎல் ராகுல் ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வருகிறார். டி20 உலகக் கோப்பை தொடரில் மிடில் ஆர்டரில் விளையாட எங்களுக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள்தான் தேவை.

    அதனால் சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் ஆகியோரை தேர்வு செய்துள்ளோம். சாம்சன் அனைத்து ஆர்டர்களிலும் ஆடுவார். அதனால் இது யார் சிறந்தவர்கள் என்பது பற்றியதல்ல. எங்களுக்கு என்ன தேவை என்பதை பற்றியது.

    • ஆண்ட்ரே ரசல் திரைத்துறையிலும் ஆர்வம் கொண்டிருக்கிறார்.
    • கிரிஷ் மற்றும் வினித் ஜெயின் தயாரித்துள்ளனர்.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரே ரசல். இவர் தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கிரிக்கெட் மட்டுமின்றி ஆண்ட்ரே ரசல் திரைத்துறையிலும் ஆர்வம் கொண்டிருக்கிறார்.

    அந்த வகையில், ஆண்ட்ரே ரசல் முதல்முறையாக பாலிவுட் பாடலில் நடனம் ஆடியுள்ளார். அவிகா கோர் மற்றும் ஆண்ட்ரே ரசல் இணைந்து ஆடியுள்ள "லட்கி து கமால் கி" என்ற பாடல் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது.

     


    மே 9 ஆம் தேதி ரிலீசாக இருக்கும் இந்த பாடலை பலாஷ் முச்சல் இசையமைத்து, இயக்கி இருக்கிறார். "லட்கி து கமால் கி பாடலை" கிரிஷ் மற்றும் வினித் ஜெயின் தயாரித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இவ்விரு அணிகளும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.
    • இதில் இரு அணிகளும் தலா 9-ல் வெற்றியை தனதாக்கி இருக்கின்றன.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    ஐதராபாத் அணி இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, ஒரு தோல்வி என்று 16 புள்ளி பெற்று முதலிடத்தில் கம்பீரமாக வீறுநடைபோடுகிறது. இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அந்த அணி அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை அதிகாரபூர்வமாக உறுதி செய்து விடும்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 9-ல் வெற்றியை தனதாக்கி இருக்கின்றன.

    • இணையவழி சூதாட்டங்கள் அல்லது வாய்ப்பு அடிப்படையிலான இணையவழி விளையாட்டுகள் குறித்த விளம்பரங்கள் சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது
    • தடை செய்யப்பட்ட இணையவழி சூதாட்டங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

    தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,

    "தமிழ்நாடு இணையவழி சூதாட்டத் தடை மற்றும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் 2022-இன்படி, இணையவழி சூதாட்டம் மற்றும் இணையவழி வாய்ப்பு விளையாட்டு, பந்தயம் போன்றவற்றை விளையாடுவதைத் தடை செய்துள்ளது.

    அவ்வாறு தடை செய்யப்பட்ட இணையவழி சூதாட்டங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றம் புரிபவர்களுக்கு 3 மாதம் வரை சிறைத்தண்டனையோ அல்லது ரூ.5,000/- வரை அபராதமோ அல்லது இரண்டும் விதிக்கப்படும். இணையவழி சூதாட்டம் (Online Gambling) அல்லது இணையவழி வாய்ப்பு விளையாட்டுகள் (Game of Chance) பரிவத்தனைகளில் ஈடுபடும் நிதி நிறுவனங்களை/கட்டண நுழைவாயில்களை இச்சட்டம் தடைசெய்கிறது.

    இணையவழி சூதாட்டங்கள் அல்லது வாய்ப்பு அடிப்படையிலான இணையவழி விளையாட்டுகள் குறித்த விளம்பரங்கள் சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணம் அல்லது பிற வழிகளில் இணையவழி சூதாட்டத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் அல்லது தூண்டும் வகையில் எந்த ஒரு நபரும் மின்னணு தொடர்பு சாதனங்கள் உட்பட எந்தவொரு ஊடகத்திலும் விளம்பரமோ அறிவிப்போ செய்ய கூடாது என்று இச்சட்டம் குறிப்பாகக் கூறுகிறது.

    அத்தகைய விளம்பரத்தில் ஈடுபடும் நபர்களுக்கு/நிறுவனத்திற்கு, 1 ஆண்டு வரை சிறைத் தண்டனையோ அல்லது 5 லட்சம் வரை அபராதமோ அல்லது இரண்டும் சேர்ந்தோ விதிக்கப்படும் என்றும் இச்சட்டம் குறிப்பிடுகிறது. அதே குற்றத்தை மீண்டும் செய்தால், சட்டம் 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.5 முதல் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கிறது.

    நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 மற்றும் பிற சட்டங்களின்படி, தடைசெய்யப்பட்ட செயல்பாடுகள்/சேவைகள் மீதான விளம்பரங்களுக்குத் தடை இருப்பதாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) அறிவுறுத்தியுள்ளது. அத்தகையான தடைசெய்யப்பட்ட விளம்பரங்களை ஒளிபரப்பும் நபர்கள்/ பிரபலங்கள், விளம்பர நிறுவனங்கள் / விளம்பர தயாரிப்பாளர்கள் / சமூக ஊடகத் தளங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் ஆணையம் அறிவித்துள்ளது.

    எனவே, இம்மாநிலத்தில் இணையவழி சூதாட்டம் மற்றும் இணையவழி வாய்ப்பு விளையாட்டு, பந்தயம் போன்றவற்றை விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள், பேனர்கள் ஆட்டோரிக்க்ஷா விளம்பரங்கள் போன்ற வெளிப்புற ஊடகங்கள் மூலமாகவும், அவர்களின் இணையதளம்/ இணையதள செயலி பயன்பாடுகளை விளம்பரப்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.

    இணையவழி சூதாட்டம் / பந்தய நடவடிக்கைகள் பற்றிய தகவல்களைப் பகிர விரும்புவோர் அல்லது இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது குறித்த ஆலோசனைகளை வழங்க விரும்புவோர் அல்லது இது சம்பந்தமாக வேறு ஏதேனும் குறைகள் இருப்பின் "www.tnonlinegamingauthority.com" இணையதளத்தைத் தொடர்பு கொள்ளவும். மேலும் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தின் tnega@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×