(Reading time: 1 minute)

 

நட்பு...

நண்பர்கள் நாம்! ஆம்,
வேறுபாடற்ற நண்பர்கள்!
ஆண், பெண் வேறுபாடற்ற நண்பர்கள்!
நட்பு என்னும் வார்த்தையே
நமக்காக தான் பிறந்ததோ!
நமக்குள் வேற்றுமை இல்லை!
நம்மிடையே வேதனையும் இல்லை!
பலரும் சொல்லுவர் நம்மை கண்டு,
இவர்கள் நண்பர்கள் - தானா என்று!
அகக்கண்ணால் காணும் போது தானே,
அழகிய நட்பின் அருமை புரியும்!!!
பின்னொரு நாளில் புன்னகையுடன் உரைப்பர்!
உண்மை நட்பு இவர்களுடையது என்று!
உலகம் என்ன உரைத்தாலும்...
என்றும்,
எனக்குள் உனக்கான இடம் மாறாமல் இருக்கும்...
என்னை மண் கொண்டு போகும் வரை!!!


No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.