காற்று - என் கள்வன்
சேலை அணிய நேர்ந்தால்
என் மெல்லிய இடை பற்றுகிறாய்
பேருந்தில் செல்ல நேர்ந்தால்
என் காதோர கூந்தலுடன் விளையாடுகிறாய்
அதிகாலை துயில் கலைந்தால்
என் முகத்தின் மீது மென்மையாய் மோதுகிறாய்
ஏன் இவ்வாறெல்லாம் செய்கிறாய் என்றால்
என்னிடம் உன்னிதழை பதிவு செய்ய என்கிறாய்
என் காற்று கள்வனே