(Reading time: 2 - 4 minutes)

கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 51 - நெஞ்சம் தான் தஞ்சமோ….!!!! - மீரா ராம்

Ilam poovai nenjil

அந்தி வானம் அழகாய் சிவந்த தருணம்

முந்திக் கொண்டு வெகுவாய் வீசியது இளங்காற்று….

கண்கள் மூடி நித்திரையில் இருந்த என்னையும்

தொட்டு செல்ல மறக்கவில்லை பூங்காற்று…

மலர்ந்த புன்னகையோடு விழி திறந்தவளுக்கு

அன்றைய நாளின் குதூகலம் உண்டாயிற்று…

கவிதைகளில் உன்னை வடித்து,

கனவுகளில் உன்னை விதைத்து,

நெஞ்சத்தில் உன்னை சுமந்து,

நாள் முழுதும் உனை என்னுள் உலவ விடுகிறேன்… எனினும்

சலிப்போ சிறு அலுப்போ ஏற்பட்டிருக்கவில்லை இதயத்தில்…

எத்தகு விந்தையடா இது?...

தன்னவனின் நினைவுகள் மங்கைக்கு தவங்களா?...

கண் மூடி தியானம் செய்தே வரம் பெறுவர்…

இங்கேயோ கண் மூடியபோதும், விழி திறந்த போதும்

ஓர் முகமே கண்ணுக்குள் நிழலாடுகிறது…

ஆம்… என் ஆசைக் கள்வனான நீ

ஓசையில்லாது எனைத் திருடிச் சென்றிட்ட

மாயமும் நானறியேனடா கண்ணா…

எப்படித்தான் இது அத்தனையும் செய்திட்டு

ஏதும் அறியா பிள்ளை போல் இருக்கின்றாயோ?...

ஹ்ம்ம்…. நினைக்கையிலேயே சில நேரம் கோபம் கொள்ளும் மனம்

மறுகணமே என் செல்லக்கண்ணன் பாவம் என உருகிப் போகிறது…

பாடாய் படுத்துறான்… தாங்க முடியலை… என

உனை வசைபாடும் உள்ளமும்

பட்டென குளிர்ந்து பனிமழை பொழிந்திடுகிறது

உன் திருமுகம் விழிகளுக்குள் வந்து போகையில்…

என்னதான் செய்திட்டாயோ என்னை?...

எனக்கே தெரிந்திடவில்லை…

நீ தான் படுத்துகிறாய் என்றால்,

உன் நியாபகங்கள் இருக்கிறதே… அப்பப்பா….

ஹ்ம்ம்… உனக்கு மட்டுமல்ல உன் நினைவுகளுக்கும்

இப்பூவையின் நெஞ்சம் தான் தஞ்சமோ என்னவோ?!!!......

பூ மலரும்

Ilam poovai nenjil 50

Ilam poovai nenjil 52

{kunena_discuss:1088}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.